பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Thursday, 16 June 2011

எப்போது மகிந்தவின் முறை வரும்?

எப்போது மகிந்தவின் முறை வரும்?



முள்ளிவாய்க்காலின் கரையிலே நிகழ்த்தப்பட்ட மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக, இன அழிப்புக்காக, போர்க்குற்றத்துக்காக மகிந்தா கும்பல் எப்போது கூண்டில் ஏற்றப்படப்போகிறார்கள். 2009ல் வன்னியில் சிங்களம் நிகழ்த்திய காட்டுமிராண்டித்தனங்களுக்கான நீதி தாமதமாகிக்கொண்டே போகின்றது. தாமதம் என்றாலும்கூட நீதி நிச்சயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையின் வேர்கள் காய்ந்துபோனாலும் இன்னும் பட்டுப்போய்விடவில்லை.


ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கைக்கு ஆதரவாக ஆங்காங்கே எழும்பும் தேசங்களின் குரல்களும், மனிதஉரிமை அமைப்புகளின் வரவேற்பும் இந்த நம்பிக்கையை கொஞ்சம் (மிகமிககொஞ்சமாக) துளிர்க்கவைத்துள்ளது. அத்துடன் இந்த மேமாதத்தில் உலக அரங்கின் நீதிமன்றங்களில் மானுடத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடந்தவிசாரணைகளும், தீர்ப்புகளும்,கைது ஆணைகளும் எமக்கான நீதியும் ஒருநாளில் விரைவாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை தருகின்றது. எல்லாவிதமான நம்பிக்கைகளும் அற்று நடமாடும் பிரேதங்களாக உலாவும் ஒரு இனத்துக்கு இத்தகைய நம்பிக்கையானது பெரும் அலைகடல் நடுவே உயிருக்கு தத்தளிக்குமொருவனுக்கு கிடைத்த சிறு மரத்குற்றிதான். பற்றிப்பிடிப்போம் இப்போதைக்கு அதனையே.


இந்தமாதம் 12ம்திகதி ஜேர்மன் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் சக்கரநாற்
காலியில் அமர்ந்திருந்த 91 வயதுடைய ஜோன் டெம்ஜனோக் (John Demjanjuk) என்ற உக்ரைன் நாட்டைசேர்ந்த நாஸிப்படை வீரனுக்கு இரண்டாம் உலக யுத்தகாலப் பகுதியில் யுத்தகாலப்பகுதியில் சொபிபர் (sobibor) தடுப்புமுகாமில் 28,060 யூதமக்களைஅழித்ததற்குதுணைபோன
தற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.



அதே ஜேர்மனியின் பிராங்போர்ட் நகர நீதிமன்றத்தில் இந்தமாதம் 11ம் திகதி ருவண்டா நாட்டின் வடகிழக்கு பகுதி நகரான ‘மவும்பா’ நகர தலைவரான (Mayor of mavumba) Rwabukombe என்பவர் மீதான இனப்படுகொலை வழக்கில் முதலாவது சாட்சி தானும் தனது ருட்சி இனத்தவர்களும் எப்படி இவரால் திட்டமிட்டு சிறைவைக்கப்பட்டோம் என்றும் சித்திரவதைசெய்யப்படடோம் என்றும் தனது மக்கள் எப்படி இனஅடிப்படையில் கொல்லப்பட்டார்கள்என்றும்சாட்சியமளித்துஇப்போதேதீர்ப்பைஓரளவுக்குஉ றுதிசெய்துள்ளார்.


உலகின் எந்தப்பாகத்திலும் நடைபெற்ற, நடைபெற்றுவரும் இனப்படுகொலைகளில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கும் உரிமை ஜேர்மனியின் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதைப்போலவே அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் அமெரிக்க பிரசையாக மாறியிருக்கும் ருவண்டாவில் ஆசிரியராகவும், ஆலைஒன்றின் அதிபராகவும் இருந்த hutu இனத்தை சேர்ந்த லாசர கொபயகா (Lazara kobagaya) என்பவர் 1994ல் நடைபெற்ற ருட்சி இனமக்கள் மீதான இனப்படுகொலையில் சம்பந்தப்பட்டதை அமெரிக்க குடியுரிமை விண்ணப்படிவத்தில் தெரிவிக்காமல் (செய்தவன் ஒப்புக்கொள்ளுவானா என்ன) விட்டதற்காக கூண்டில் ஏற்றப்பட்டு விசாரிக்கப்படுகின்றான்.


மிகநீண்ட இனஅழிப்பு வழக்கொன்றில் தன்சானிய நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தால் (international criminal tribunal for Rwanda-ICTR) இந்தமாதம் 17ம் திகதி ஒகஸ்டின் பிசிமுங்கா (Augustin Bizimungu) என்ற இனப்படுகொலையாளிக்கு 30 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவனே 1994களில் ருவண்டாவில் இனப்படுகொலை நடைபெற்ற பொழுதுகளில் தலைமை இராணுவத்தளபதியாக இருந்துள்ளான். இவனுடன் மேலும் மூன்று மூத்த இராணுவ முன்னாள் தளபதிகளும் இதே நாளில் தண்டிக்கப்ப்டுள்ளனர்.


அதைப்போலவே இம்மாதம் 16ம் திகதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் லிபிய அதிபர் கடாபிக்கு எதிராக, அவர் மானுடத்துக்கு எதிரான குற்றச்
செயல்களில் ஈடுபட்டதற்காக அவரை கைதுசெய்யவேண்டும் என்ற மனுவை கொலண்டில் அமைந்திருக்கும் சர்வதேசநீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு, போர்க்குற்றம், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், திட்டமிட்டு, பாரிய அளவில் பொது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்ற எந்த பெயரில் இருந்தாலும் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டோர் எங்காவது தண்டிக்கப்படும்போதும், நீதிவிசாரணைக்கு உள்ளாக்கப்படும்போதும் ‘எங்களுக்கு யாருமே இல்லையா?’ என்ற முள்ளிவாய்க்காலின் இறுதிக் கதறலுக்கு எப்போது நீதிகிடைக்கும்என்றஏக்கமே எழுகின்றது.




இத்தகைய வெறும் ஏக்கம் மட்டுமே சிங்களத்தின் இனப்படுகொலையாளிகளை தண்டித்துவிடப்போதுமானது அல்ல. ஐ.நா செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் பரிந்துரைகளை முதல்கட்டமாக சிங்களம் நிறைவேற்றுவதற்கு அழுத்தங்களை வழங்க புலம்பெயர் சமூகம் முயலவேண்டும்.


இன்னுமொரு முனையில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலைதான் என்ற நிரூபணங்களை சர்வதேச சமூகத்தின் முன் வைப்பதற்கு ஏற்ற அனைத்து செயற்பாடுகளையும் தமிழர் அமைப்புகள் இனிவரும் காலத்தில் கூர்மைபடுத்த வேண்டும். இதற்கானபாதைமிகநீண்டதாகக்கூட இருக்கலாம். ஏனென்றால் எண்ணெய் பீறிடும் பாலைவனத்தில் இருந்து நீளும் நீதிக்கான குரலுக்குதான் முன்னுரிமை வழங்கப்பட்டு
விடும். எங்களைவிட வளம்மிகுந்த மண்ணில் இருந்து அளிக்கப்படும் நீதிகோரிய மனுவுக்குதான் எம்மை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் உரிமை வழங்கப்பட்டுவிடும். பாராபட்சம் நிறைந்ததும், ஓரவஞ்சனை கொண்டதும், பாராமுகம் கொண்டதும்தான் சர்வதேசநீதி அமைப்பு. ஆனாலும் எமக்கு இப்போது அதனைவிட்டால் வேறு வழியில்லை.
எமது மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படபோகிறார்கள் என்று தெரிந்தும், எமது மக்கள் கூட்டம்கூட்டமாக கொல்லப்படுகின்றபோதும் பார்த்துக்கொண்டிருந்த சக்திகளிடம்தான் நாம் எமக்கான நீதியை கேட்டுநிற்கின்றோம் என்பதை மறக்க கூடாது. யாரிடம் சென்றுதன்னும் மகிந்த கும்பலை கூண்டில் ஏற்றியே ஆகவேண்டும். மகிந்த கும்பல் கூண்டில் ஏற்றப்படுவது என்பதும் தண்டிக்கப்படுவது என்பதும் இழந்த உயிர்களை மீண்டும் பெற்றுதராது என்பதும் இறுதி நேரத்து வதைகளின் வலிகளை ஆற்றாது என்றாலும் அந்த மக்கள் எதற்காக அந்த மண்ணில் நின்றார்களோ, அந்த மண்ணில் போராடினார்களோ அந்த தாயக விடுதலைக்கான முதல் திறவுகோலாக மகிந்த கும்பல் தண்டிக்கப்படப் போவது அமையும். நீதியின்கனத்தசட்டப் புத்தகங்களிலும், புரியாத சரத்துகளிலும் விறைத்து
நிற்கும் வாக்கியங்களைவிட முள்ளிவாய்க்கால்பொழுதில் எமது மக்கள் வடித்தகண்ணீர் அதிக வலிமையானவை. அவை என்றாவது ஒருநாள் இதற்கு பதில்பெற்றே தீரும்.
‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரற்றே செல்வத்தை தேய்க்கும் படை’


தன்னைத் தானே
ஈகம் செய்தவன்

மே18 என்பது இன்னுமொரு விதத்தில் முக்கியமானதும், தலைவணங்கி நினைவு கொள்ளத்தக்க நாளுமாகும். இருபத்திஏழு வருடமாகின்றது. 18.05.1984 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலாக சயனைற் அருந்தி வீரச்சாவடைகின்றான் வீரவேங்கை பகீன் என்ற செல்வம்.


அவன் எல்லோரையும் அடிக்கடி கேட்டுக்கொண்டதைப்போலவே “இது வேலை செய்யுமா?, வேலை செய்யுமா?” என்பதற்கு சாட்சியாக அது வேலை செய்யும் என்று சொல்லாமல் சொன்னபடி பகீன் போய்சேர்ந்துவிட்டான். மிகவும் துறுதுறுப்பானவன்அவன். அவனைப் பொறுத்தவரையில் ஏதாவது செய்துகொண்டே எந்தநேரமும் இருக்கவேணும் விடுதலைக்காக.
1983 தென்னிலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் கொழுந்துவிட்டுஎரிந்துமுடிந்த பொழுதில் அது விடுதலைப் போராட்டத்துக்கு ஏராளமான
வர்களை தாயகத்தில் இருந்து மட்டுமல்லாமல் அப்போது புலம்பெயர்ந்திருந்த தமிழர்களிலும் சிலரை ஈர்த்துக்கொண்டு உள்இழுத்தது. 1983 ஓகஸ்ட்டில் சென்னையில் அமைந்திருந்த உட்லண்டஸ் விடுதியில் பாலசிங்கம் அண்ணாவுடன் ஒருசில தமிழ் இளைஞர்களும் ஜேர்மன், இங்கிலாந்தில் இருந்து போராட்டத்தில் இணைவதற்காக வந்திருந்தனர். அவர்களில் ஒருவனாக முதலில் அறிமுகம் ஆனவன் பகீன். பகீனுடன், குமரப்பாவும், பாலா (பொன்னம்மானுடன் வீரச்சாவடைந்தவர்) இன்னும் ஓரிருவரும் வந்திருந்தனர்.
பகீன் வந்துசேர்ந்தபொழுது மிகவும் முக்கியமான காலகட்டமாக இருந்திருந்தது. அப்போதுதான் அங்கு பயிற்சி முகாம்களையும், கட்டமைப்புகளையும் உருவாக்க தலைவர் முடிவு செய்திருந்த நேரமும் அதுதான். ஏராளம் இளைஞர்களை அமைப்புக்குள் எடுப்பதற்கான ஆயத்த வேலைகளை தாயகத்தில் நிறைவுபெற்று வரும்வேளையில் அவர்களை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து தங்கவைக்கவும், பயிற்சி அமைக்கவும் ஏராளமான அலைச்சல்களையும், நித்திரை அற்றபொழுதுகளையும், கனமான வேலைகளையும் பகீனும் சேர்ந்தே சுமந்தான்.


பயிற்சி முகாம்களின் காணிகளை சுத்தம்செய்வது, கொட்டில்போடுவது, புதிய இருப்பிடங்களை நகரங்களுக்குள் எடுப்பது என்று மிகக்குறுகிய நாட்களுக்குள் பகீன் நிறைய செய்தான். ஆனாலும் முதல் அணிகளில் பயிற்சி எடுக்கும் வாய்ப்பு அவனுக்கு கிட்டவில்லை. அவனுக்கு பயிற்சி எடுப்பதில் அளவு கடந்த விருப்பம் இருந்தது. ஏனென்றால் பயிற்சி எடுத்தால்தான் நாட்டுக்கு போகலாம் என்று. பயிற்சி எடுக்காமலே நாட்டுக்குப் போவதற்கு அவனின் பொறுப்பாளர்களிடம் எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பான். வடபழனிப் பகுதியில் அமைந்திருந்த அமைப்பின் இருப்பிடம் ஒன்றில் அதன் பொறுப்பாளரான மாதகல் ராஜனிடம் (லெப்.கேணல் ராஜன்) பீல்ட்டுக்கு அனுப்புங்கோ, நாட்டுக்கு அனுப்புங்கோ என்று நச்சரித்து பகீன் வாங்கிய சிறுதண்டனைகள் கணக்கில் அடங்காது.


தாயகத்தைவிட்டு தொலைவில் ஜேர்மனியில் இருந்ததால் அவன் தனது தேசத்தை, தனது மண்ணை ஆழமாக நேசித்ததும், அதை காணதுடித்ததும் அவனுடன் ஒவ்வொருமுறை கதைக்கும் பொழுதிலும் புரியக்கூடியதாக இருக்கும். அவன் இருந்த வடபழனி முகாமுக்கு மூத்த உறுப்பினர்கள் யார் வந்தாலும் அவர்களிடம் தன்னை களத்துக்கு அனுப்பும்
படி கேட்டுக்கொண்டே இருப்பான்.அவனின் உறுதியைப் பார்த்த தலைமை அவனை பண்டிதருக்கு துணையாக அனுப்பிவைத்தது. மிகவும் சிக்கல் நிறைந்ததும், மற்றைய இயக்கங்களுடன் முரண்பாடு அதிகமானதுமான ஒரு காலகட்டத்தில் அவன் அரசியல் வேலைகளை பண்டிதரின் வழிகாட்டலில் செய்தான். மக்களுடன் ஒரு ஆழமான தொடர்பு வலையமைப்பை மிகக்குறுகிய காலத்திலேயே அவனால் உருவாக்கமுடிந்தது அவனின் ஓய்வொழிச்சல் இல்லாத வேலைகளால்தான். அப்படியான ஒரு பொழுதில்தான் எதிரியிடம் பிடிபட்டால் அமைப்பின் இரகசியங்களை சொல்லிவிட நேரிடும் என்பதற்காகத்தன்னைத்தானே சயனைற் அருந்தி அழித்துக்கொண்டு வீரச்சாவடைந்தான்.
தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பகீனும் முக்கியமான ஒரு நடுகல்தான். நெஞ்சுக்குள் எப்போதும் குத்திட்டு நிற்கும் அவனின் நினைவுகள். தாயகத்தை இப்படியும் ஒருவன் நேசிக்கமுடியுமா என்பதை அவனுடன் கதைத்தபொழுதுகள் எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கும்.

1991க்குப் பிறகுதான் பிரபாகரனுடன் விரோதம் என்றால், 1987ல் அவரைக் கொல்லச் சொன்னது எதற்காக

1991க்குப் பிறகுதான் பிரபாகரனுடன் விரோதம் என்றால், 1987ல் அவரைக் கொல்லச் சொன்னது எதற்காக?



அடிப்பவனுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து விட்டு, அடிபட்டவனுக்கு உணவுப் பொட்டலம் போடுகிற நாடு உலகத்திலேயே அமெரிக்கா மட்டும்தான் - என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் தவறாமல் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியிருக்கிறது.

எந்தையும் தாயும் மகிழ்ந்தோ மகிழாமலோ குலாவியோ உலாவியோ இருந்த உங்கள் இந்தியா மட்டும் என்ன கிழிக்கிறது? அடி அடி என்று இலங்கைக்கு ஆயுதங்களை வாரிவழங்கிவிட்டு, நசுங்கி நாசமாகியிருக்கிற தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப் போவதாக சலங்கை கட்டிக்கொண்டு ஆடுகிறதே... இதற்கு என்ன அர்த்தம்?

பெண்பிள்ளையைக் கற்பழித்துவிட்டு, பிறக்கிற குழந்தைக்குப் பட்டுச் சட்டை தைத்துக் கொடுப்போம் - என்று பட்டாசு வெடிக்கிறார்களா? இவர்களை எந்த இடத்தில் எட்டி உதைப்பது என்பது கூட தெரியாத சொரணைகெட்ட இனமாகவா மாறிவிட்டிருக்கிறது தமிழினம்!

தங்கள் சொந்தமண்ணில், தாங்கள் ஆண்ட மண்ணில் சிங்களருக்கு முன்பே வாழ்ந்த மண்ணில் உரிமை கேட்டுப் போராடியவர்கள், மானம் மரியாதையோடு வாழ்ந்த ஈழத்துச் சொந்தங்கள். பெரியார் திடல் மேனேஜர்கள் மாதிரியோ, அறிவாலயத்து டேமேஜர்கள் மாதிரியோ டம்மி புலிகள் இல்லை அவர்கள். எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்ளாமல் சுயமரியாதையோடு போராடிய நிஜப் புலிகள். நண்பன் இலங்கையோடு சேர்ந்து நேரடியாகவே அவர்களை நசுக்க முயன்று இதே இந்தியா மூக்குடைபட்டது உண்மையா இல்லையா என்று கோபாலபுரத்துக்கு ஒரு கடுதாசி எழுதிப் பாருங்கள். 'அந்தக் கூலிப்படையை வரவேற்கச் செல்லாத மாவீரன் நான்' என்று, காங்கிரஸோடு உறவு முறிந்த மறுநாளே உங்களுக்கு பதில் வராவிட்டால் நான் எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன்.

உண்மையில் விடுதலைப் புலிகளிடம் தோல்விகண்டு அவமானத்தோடு திரும்பியது இந்திய ராணுவம் அல்ல.... ராஜீவ் காந்தியின் பக்குவமற்ற பரிதாபகரமான ராஜதந்திரம். ராஜீவ் காந்தி என்கிற மாஜி பைலட், தனது அறியாமையின் காரணமாக, திட்டமிட்டு தம்மைத் தவறாக வழிநடத்திய அசட்டு அம்பிகளை நம்பிக் கெட்ட வரலாறு அது. தேசப்பற்று ஒன்றே 'ஆக்சிஜனாக' இருக்கும் வெள்ளிப் பனிமலைகளின் மீது நின்று எல்லை காக்கப் போராடும் ஈடு இணையற்ற இந்திய வீரர்களுக்கு 'கூலிப்படை' என்கிற வில்லையைக் கட்டி, விபரீத விளையாட்டில் ஈடுபடுத்தினார்கள் அவர்கள். தேசம் காக்கும் எங்கள் வீரர்களைக் கூலிப்படை ரேஞ்சுக்குக் கொண்டுசெல்லாதே - என்று குரல் எழுப்பக்கூட துணிவின்றி மௌனம் சாதித்தது நாடு.

ராஜீவ் காந்தி என்கிற ஒரு அரசியல்வாதியின் தவறான முடிவுக்கு, ஆயிரமாயிரம் இந்திய வீரர்கள் விலைகொடுக்க வேண்டியிருந்தது.

'ராஜீவ் - ஜெயவர்தனே ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கும் பலனில்லை, பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கும் பலனில்லை. வேறு யாருக்காக இந்த ஒப்பந்தம் போடப்படுகிறது' என்று பீல்டுமார்ஷல் மானெக் ஷா போன்றவர்கள் கேட்டது ராஜீவின் காதில் விழவில்லை. ஜெயவர்தனே என்கிற கிழட்டு நரியின் ஊளைச்சத்தம் மட்டும் தான் அவரது காதில் விழுந்தது. தனித்த பண்புகளும் அடையாளங்களும் உள்ள ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க, பாரம்பரியம் மிக்க தன் ராணுவத்தை இரவல் கொடுக்கப்போய், வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக்கொண்டது இளிச்சவாய் இந்தியா. சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்வது - என்று சொல்லாமல் இதை வேறெப்படித்தான் விவரிப்பது!

இன்று இதைச் சொல்லும்போது காங்கிரஸ்காரர்களுக்குக் கோபம் வரலாம். ஆனால், ஒரு லட்சம் தமிழர்களைக் கொல்லத் துணை நின்ற குற்றத்துக்காக காங்கிரஸை நாம் விரட்டி விரட்டி அடிக்கும்போது, தோசையை அப்படியே திருப்பிப் போடுவார்கள்... இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸ் தவறான முடிவுகளை எடுத்ததற்கு காங்கிரஸ் கட்சி எந்த விதத்திலும் காரணமல்ல என்பார்கள்.

இதெல்லாம் கற்பனையல்ல. காங்கிரஸின் எதிர்காலத் தலைவராக 1975ல் முன்நிறுத்தப்பட்டவர், ராஜீவின் தம்பி சஞ்சய் காந்தி. (அப்போதெல்லாம் விமானத்தை விட்டால் சோனியா, சோனியாவை விட்டால் விமானம் என்பதுதான் ராஜீவின் வாழ்க்கையாக இருந்தது) அன்று, அடுத்த தலைவராக முன்நிறுத்தப்பட்ட சஞ்சய்காந்தியின் முன் காங்கிரஸின் மூத்த தலைவர்களெல்லாம் கைகட்டி வாய்பொத்தி நின்றார்கள். இன்று, அதே சஞ்சய் காந்திதான் நெருக்கடி நிலை கால தவறுகளுக்குக் காரணம் என்று கூசாமல் அறிவிக்கிறது காங்கிரஸ். இன்னும் சில ஆண்டுகளில், இலங்கைப் பிரச்சினையில் எடுத்த தவறான முடிவுகளுக்கு ராஜீவ்தான் காரணம் என்று அறிவிக்காமலா போய்விடப் போகிறது காங்கிரஸ்! சஞ்சய்காந்தியின் நிலை ராஜீவுக்கு வராமல் போய்விடப் போகிறதா என்ன?

அன்று ராஜீவ் காந்தி என்கிற விவரமில்லாத திடீர்த் தலைவர் செய்த இமாலயத் தவறுக்கான விலையை, தமிழினம் இன்றுவரை கொடுத்துக்கொண்டிருக்கிறது. ராஜீவ் காந்தி எங்கள் மரியாதைக்குரிய தலைவர் - என்று இன்றைக்குக் கடிதம் எழுதும் நமது பழைய நண்பர்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவாவது இதையெல்லாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்கார், பான்ஜூர் என்றெல்லாம் ஆரம்பித்து சோனியாகாந்திக்கு நண்பர்கள் கடிதம் எழுதட்டும்... ராஜீவ் காந்தியை மலர்மாலையோ வேறு மாலையோ போட்டு அவர்கள் மதிக்கட்டும். அவர்களுடைய தனிப்பட்ட வியாபாரத்தில் நாம் தலையிடப் போவதில்லை. அதே சமயம், நாடாளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டதால் வரலாற்றை மாற்றி எழுதிவிட முடியும் என்கிற அவர்களது அசட்டு நம்பிக்கைகளை நாம் அங்கீகரிக்கப் போவதுமில்லை.

நண்பர்களே இப்படியென்றால், பார்டரில் பாஸ் செய்து பாராளுமன்றத்துக்குள் போனவர்கள் சும்மா இருப்பார்களா? 1991மே 21ம் தேதிக்கு முன் விடுதலைப் புலிகளுக்கும் காங்கிரஸுக்கும் எந்த விரோதமும் இல்லையாம்! போகிற இடமெல்லாம் இப்படி கயிறு திரித்துக் கொண்டிருக்கிறார் சிவகங்கை சிதம்பரம். 1987 செப்டம்பரிலேயே பிரபாகரனைக் கொல்லச் சொல்லி டெல்லியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு உத்தரவு போனதே... 1991க்குப் பிறகுதான் பிரபாகரனுடன் விரோதம் என்றால், 1987ல் அவரைக் கொல்லச் சொன்னது அளவுக்கதிகமான பாசத்தாலா? உள்துறைக்கும் உளவுத்துறைக்கும்தான் வெளிச்சம்!

தமிழர்களை எவ்வளவுதான் கேவலமாக நினைத்தாலும், ஒரே ஒரு தீர்மானத்தை மட்டுமாவது இவ்வளவு காலமாக உருப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருந்தது காங்கிரஸ். ராஜீவ் சொன்னதைப் போல் இலங்கையில் தமிழர் பகுதிகளான வடக்கையும் கிழக்கையும் ஒரே மாகாணமாக இணைக்க வேண்டும் - என்பதுதான் அந்த தீர்மானம். இந்தமாதம் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அந்தத் தீர்மானத்தையும் காணோம்.

ராஜபட்சே மனம் கோணுகிற மாதிரி நடந்து கொள்ளலாமோ... ராஜீவின் கொள்கையையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, ராஜபட்சேவுடன் சேர்ந்து மாஞ்சா நூலில் காற்றாடி விட்டு மிச்சமிருக்கிற ஈழத் தமிழர்களின் கழுத்தையும் அறுக்கப் பார்க்கிறது சோனியா காங்கிரஸ்.

சோனியாவைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை. இத்தாலி, ரோம், பிரான்சு, ஜெர்மன் பற்றித் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு, ஈழத்தைப் பற்றியும் இலங்கையைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் அவர் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது நியாயமுமில்லை. என்றாலும், தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டுவரப் போவதாக அதிரடியாக அறிவித்துக் கொண்டிருக்கிற ராகுல் காந்தியிடம் கேட்கவேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன.

ராஜீவ் மகன் ராகுலுக்கும், சித்தப்பா சஞ்சய் காந்திக்கும் நிறைய ஒற்றுமைகள். மூத்த தலைவர்களை அவமதிப்பதிலும் இளைஞர் காங்கிரஸ்தான் காங்கிரஸ் என்கிற தோற்றத்தை உருவாக்குவதிலும் அச்சு அசலாக சித்தப்பாவோடு அப்படியே பொருந்துகிறார் ராகுல். சஞ்சய் காந்தியைப் பார்த்து பயந்து நடுங்கியமாதிரி, ராகுலைப் பார்த்தும் நடுங்குகிறார்கள் காங்கிரஸ் பெருந்தலைகள். தறுதலைகளெல்லாம் பெருந்தலைகள் ஆகிவிட்ட ஒரு இயக்கத்தில் இதுதான் நடக்கும். அதனால்தான், ராகுலுக்கு தேசிய அரசியலைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது, தேசத்தின் தலைவராகப் பெரிதுபடுத்திக் காட்டப்படும் அளவுக்கு அவர் என்ன தியாகம் செய்திருக்கிறார்....என்கிற குமைச்சலெல்லாம் இருந்தாலும் அதை மறைத்தபடி மரியாதை காட்டுகிறார்கள் காங்கிரஸில் இருக்கிற மரப்பாச்சி பொம்மைகள். ராகுல் சொல்வதெல்லாம் வேதவாக்காக மாறிவிடுகிறது.

டிசம்பர் இறுதியில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்த ராகுல், சென்னையில் அறிவுஜீவிகள் சிலரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அறிவுஜீவிகளா, அப்படியென்றால் யார் - என்று கேட்பவர்களுக்கு முதலில் பதில் சொல்லிவிடுகிறேன். திபெத், பாலஸ்தீனம், கிழக்கு திமோர், வட அயர்லாந்து, எரித்திரியா போன்ற நாடுகளின் விடுதலைப் போராட்டங்களையெல்லாம் அங்கீகரித்துவிட்டு, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க எவரெல்லாம் மறுக்கிறாரோ அவரெல்லாம் இங்கே அறிவுஜீவி. உணர்ச்சி வசப்பட மாட்டார்களாம்... அறிவு சார்ந்தே யோசிப்பார்களாம்...! கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. தங்கள் குடும்பத்து பெண்பிள்ளை யாராவது இசைப்பிரியா மாதிரி கதறக்கதறக் கற்பழித்துக் கொல்லப்பட்டால் இந்த அறிவுஜீவிகள் உணர்ச்சி வசப்படாமல், பொறுமையையும் அமைதியையும் போதித்துக் கொண்டிருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

இங்கே, சமூகப் பொறுப்பும் போர்க்குணமும் இல்லாதவர்களே அறிவுஜீவிகள் என்றாகிவிட்டது. அறிவுஜீவிகளின் இலக்கணம் தலைக்கனம் தான் என்கிற மூட நம்பிக்கை வேறு. இதனால்தான், சிறையில் இருக்கிற சீனத்து அறிவுஜீவிக்கு நோபல் பரிசு கொடுத்துவிட்டு அவரது உறவினர்களாவது வந்து வாங்கிக் கொள்வார்களா என்று காத்துக்கிடந்தது நோபல் பரிசு தேர்வுக் குழு. ராகுல் காந்தி வரமாட்டாரா என்று வழிமேல் விழிவைத்து கன்னிமாரா ஓட்டலில் காத்திருந்தது இங்கேயுள்ள அறிவுஜீவிகள் குழு.


நாளைக்கு ராகுல் பிரதமராகிவிட்டால்? அதனாலேயே அவரைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பைத் தங்களது வாழ்க்கையின் பொன்னான தருணங்களில் ஒன்றாகக் கருதி, காத்துக் கிடந்து பார்த்தார்கள் தமிழக அறிவு ஜீவிகள். அவர்களில் உண்மையான மனிதர்களும் இல்லாமலில்லை என்பதுதான் ஒரே ஆறுதல். அந்த மனிதர்களில் ஒருவர், 'இனப்படுகொலை செய்த ராஜபட்சேவை காமன்வெல்த் விளையாட்டு விழாவுக்கு அழைத்தது நியாயமா' என்று நேரடியாகக் கேள்வி கேட்க, அலட்டிக்கொள்ளாமல் ராகுல் அதற்கு அளித்த பதில் - ராஜபட்சேவை நான் அழைக்கவில்லை- என்பதுதான்.

நல்லவேளையாக, கருணாநிதி பாணியில், 'காமன்வெல்த்தா... கல்மாடியிடம் போய்க் கேளு' என்று அவர் சொல்லிவிடவில்லை.

இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களில் ராகுல் பேசும்போது, போதனைகளுக்கு பஞ்சமேயில்லை. காமராஜைப் போல், கக்கனைப் போல் அர்ப்பணிப்புடனும் நேர்மையாகவும் பணியாற்ற வேண்டும் என்று ராகுல் பேசியதற்கு என்ன அர்த்தம்? ஒரு தங்கபாலு மாதிரி, ஒரு இளங்கோவன் மாதிரி, ஒரு சிதம்பரம் மாதிரி, ஒரு வாசன் மாதிரி இருக்கவேண்டும் என்று அவராலேயே கூட சொல்லமுடியாத அளவுக்கு ஆளாளுக்கு கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்களா என்ன! ராகுலுக்கே வெளிச்சம்.

காமராஜ் என்கிற பெயரை உச்சரிக்கும் ராகுலுக்கு, அந்த உயர்ந்த மனிதரைப் பற்றி ஏதாவது தெரியுமா என்பது தெரியவில்லை. டெல்லிக்குக் காவடி எடுக்காமலேயே 14 ஆண்டுகள் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தவர் அவர். காமராஜின் ஆதரவாளர்களை - ஒரு கோஷ்டி - என்று பொருள்படுகிற மாதிரி மகாத்மா காந்தி தனது பத்திரிகையில் எழுதிவிட, அவருடைய அந்தப் பார்வை தவறானது என்றும், அப்படி எழுதியதற்காக அவர் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றும் காமராஜ் கடிதம் எழுதினார். காந்தி வருத்தம் தெரிவித்தபிறகுதான், பிரச்சினை முடிவுக்கு வந்தது. அவர்தான் காமராஜ்! காங்கிரஸில் வேறு எவர் காமராஜ்?

நடமாடும் காமராஜ், வாழும் காமராஜ், குட்டி காமராஜ், ஜெராக்ஸ் காமராஜ் என்றெல்லாம், காங்கிரஸ் தலைகளிடம் மேட்டர்களை முடிப்பதற்காகக் காத்திருப்பவர்கள் அவர்களுக்கு பேனர் வைக்கிறார்களே, அதைப் பார்க்கும் போது, ஜி.கே.வுக்கோ, ஈ.வி.கே.எஸ்.சுக்கோ, கே.வி.க்கோ, பி.சி.க்கோ தொடையின் மீது கம்பளிப்பூச்சி ஊர்வதுமாதிரி அருவருப்பாயிருக்காதா? அல்லது அவர்களுக்கு அருவருப்பு என்கிற உணர்வே இல்லாது போய்விட்டதா? புரியவில்லை! காங்கிரஸ் பெருந்தலைகளை ராகுலிடம் போட்டுக் கொடுப்பதிலேயே குறியாயிருக்கும் இளைஞர் கோஷ்டி, ராகுலின் கவனத்துக்கு இதையும் எடுத்துச் செல்லவேண்டும்.

தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் கோபாலபுரத்தை ராகுல் தவிர்த்துவிடுவதற்கு அரசியல் அடிப்படையிலான காரணங்கள் இருக்கலாம். திருமலைப் பிள்ளை தெருவையும் தவிர்த்து விடுகிறாரே, ஏன்? காமராஜ் ஆட்சி, காமராஜ் ஆட்சி என்று மூச்சுக்கு முன்னூறு தரம் முனகுகிறார்கள் தமிழக காங்கிரஸ்காரர்கள். ராகுல் காந்தியோ, அந்த மக்கள் தலைவர் வாழ்ந்த திருமலைப் பிள்ளை சாலை இல்லத்துக்குப் போய் அஞ்சலி செலுத்துவதைக்கூட தவிர்க்கிறார். அஞ்சலி என்பது வெறும் சடங்கல்ல. காமராஜ் வீடு மாதிரி ஒரு வீட்டுக்குப் போய்ப் பார்த்தால்தானே, ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் எளிமையாக வாழ முடியும் என்கிற நம்பிக்கை வலுப்படும்!

லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி என்று இரண்டு பிரதமர்களை உருவாக்கிய காமராஜை கிங்மேக்கர் என்று இந்தியத் தலைவர்கள் அழைத்த காலம் ஒன்று இருந்தது. அது, சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு. காங்கிரஸ் உடைந்து இந்திராவின் தலைமையில் இ.காங்கிரஸும், காமராஜ் தலைமையில் பழைய காங்கிரஸும் இயங்கியபோது, எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற காமராஜை கருணாநிதியுடன் சேர்ந்து நக்கலடித்துக் கொண்டிருந்தது இ.காங்கிரஸ். அப்போது, இ.காங்கிரஸ் மேடைகளில் பிரச்சார பீரங்கி திருவாளர் ப. சிதம்பரம்தான். இப்படியாக, காமராஜுக்கு எதிர் அணியிலேயே இருந்த சிதம்பரமே, காமராஜ் ஆட்சி என்று சொல்லும்போது, ராகுல் மட்டும் காங்கிரஸ் ஆட்சி என்று தனி ஆவர்த்தனம் வாசிக்கிறார். காமராஜைக் காட்டாமல் யுவராஜைக் காட்டியே ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நம்புகிறாரா!

தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் இருப்பதை ராகுல் விரும்பவில்லையாம். அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? (நமக்குக் கூடத்தான், காங்கிரஸ் இரண்டாமிடத்தில் இருப்பதாக ராகுல் புளுகுவது பிடிக்கவில்லை....) இளைஞர் காங்கிரசார் கிராமங்களுக்குப் போகவேண்டுமாம்... கிராம அளவில் காங்கிரஸைப் பலப்படுத்தினால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருமாம்.... அப்போது இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முதலமைச்சராக வருவாராம். இதெல்லாம் ராகுலின் கிளிஜோதிடம். இவர் சொல்வதில் எதுவுமே புதிதல்ல! கொக்கைப் பிடிக்க வேண்டுமானால் ஆற்றின் மையப்பகுதிக்குப் போகவேண்டும்... அதற்குப் பிறகு கொக்கின் தலையில் வெண்ணெய் வைக்கவேண்டும்... வெண்ணெய் உருகி கண்ணில் வழியும் போது கொக்கு கண்ணை மூடும்... அப்போது லபக்கென்று பிடித்துவிடவேண்டும்... என்பதெல்லாம் தமிழ்நாட்டில் எவ்வளவோ காலமாக இருக்கின்ற நக்கல் கதைகள். இது இருக்கட்டும்... கிராமங்களுக்குப் போங்கள் - என்பதுதானே அண்ணல் காந்தியின் அறிவுரை. டெல்லியைவிட்டுப் போய்விட்டார்களா இந்திராவின் குடும்பத்தார்?

ராகுல் இப்படியெல்லாம் அலப்பரை செய்து கொண்டிருக்க, அவரது தாயார் டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் பொரிந்து தள்ளியிருக்கிறார். எதற்காகப் பொரிகிறார் என்று பார்த்தால், ஊழலுக்கு எதிராகப் பொரிகிறாராம். அதுவும் ஆவேசத்துடன். ஊழலில் ஈடுபடுவோரை அவரால் சகித்துக் கொள்ளவே முடியாதாம்.... ஊழலுக்கு எதிராகப் போர் தொடுக்கவேண்டுமாம். இதெல்லாம் சாட்சாத் சோனியா காந்தியே சொன்னது. விட்டால், போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்ட குவோட்ரோச்சியை பிடித்து உள்ளே தள்ளி விட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார் போல் இருக்கிறது.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த குளறுபடிகளால் நாட்டுக்கு ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்கிறார்கள். ஆனால், தொகை சிறிதாக இருந்தாலும் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் இதைக்காட்டிலும் மோசமானது. நாட்டின் பாதுகாப்புக்காக வாங்கப்பட்ட பீரங்கிகளிலேயே கமிஷன் என்றால், அதை வாங்கியவர்களின் கைகளில் நாடு பாதுகாப்பாக இருக்கமுடியுமா? ஆட்சியில் இருந்தவர்களுக்குத் தெரிந்தே அந்த கமிஷன் கைமாறியிருந்தால், அவர்கள் குற்றவாளிகள். அவர்களுக்குத் தெரியாமலேயே யாரோ கமிஷன் அடித்திருந்தால், ஆட்சியிலிருக்கவே தகுதி அற்றவர்கள். இந்த இரண்டில் ராஜீவ் எது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் விஷயத்திலும் இதே அளவுகோலைத்தான் பயன்படுத்த வேண்டும். ராஜாவுக்குத் தெரிந்தே தவறுகள் நடந்திருந்தால், அவர் குற்றவாளி. அவருக்குத் தெரியாமலேயே நடந்திருந்தால், பதவியிலிருக்கவே அவர் லாயக்கில்லாதவர். ராஜாவை விடுங்கள்...டெல்லி வரை வீல்சேரில் போய், இப்படிப்பட்ட ஒருவருக்காக வாதாடி போராடி பதவியை வாங்கிக் கொடுத்தாரே, அந்த மனிதர் எதற்கு லாயக்கு?

கடைசியில் காமன்வெல்த் ஊழலில் கல்மாடி சொன்னதைத்தான் அத்தனைப் பேரும் சொல்லப் போகிறார்கள். காமன்வெல்த் போட்டி செலவில் 10 சதவீதம்தான் எங்கள்வாயிலாக செலவிடப்பட்டது, மீதி 90 சதவீதத்தை டெல்லி அரசு தான் செலவு செய்தது - என்பது கல்மாடியின் வாதம். 90 சதவீத ஊழல் அங்கேதான் நடந்தது என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறார் கல்மாடி. இவர்களையெல்லாம் இங்கே வைத்துக்கொண்டிருந்தால், சோனியா இத்தாலிக்குப் போய் கோட்ரோச்சியுடன் சேர்ந்துதான் ஊழலை ஒழிக்கவேண்டியிருக்கும்.
சொன்னதைப் போலவே ஊழலுக்கு எதிராகப் போர் தொடுக்கவேண்டும் என்று நினைத்தால் சோனியா என்ன செய்யவேண்டும்? ஊழல் புகார் எழுந்தால் அதுபற்றி உடனடியாக விசாரிக்கவேண்டும். அந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிக்குப் பணியாமல் குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஆறஅமர பொறுமையாக விசாரித்துக் கொண்டிருந்துவிட்டு, அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் பொரிந்து தள்ளுகிறாரே அக்பர் ரோடு அன்னை.... யாரைக் காப்பாற்ற இப்படி சீன் போடுகிறார்? பிரியாணியை ஒரு பிடிபிடித்து ஏப்பமும் விட்டபிறகு, யார் வீட்டு ஆடு என்று கண்டுபிடித்துவிடப் போகிறாரா சோனியா?

அறிவுஜீவிகள் இதைப்பற்றி யோசிக்கிறார்களோ இல்லையோ, அப்பாவி வாக்காளர்கள் இதைப்பற்றி யோசிக்கவேண்டும். ஒன்றே முக்கால் லட்சம் கோடியைப் பற்றி நாடு கவலைப்படும்போது, ஒரு லட்சம் உயிர்களைப் பற்றி நாம் கவலைப்படவேண்டும். காலங்கடந்தாவது பொரிந்து தள்ளும் அன்னை சோனியாவால் ஒன்றே முக்கால் லட்சம் கோடியைக் கூட மீட்டுவிட முடியும், முள்ளிவாய்க்காலில் உழுது புதைக்கப்பட்டுவிட்ட ஒரு லட்சம் உயிர்களை அந்த ஆறுதல் மாதாவால் மீட்டுத்தர முடியுமா என்று பொட்டில் அடிக்கிற மாதிரி போட்டு உடைக்கவேண்டும். அப்போதுதான், தமிழகத்தின் அடையாளங்களான காமராஜ், கக்கனைக் காட்டி கடைவிரிக்க முயல்பவர்களுக்கு நம்மால் தடை விதிக்கமுடியும்.

புகழேந்தி தங்கராஜ்

மொழி காத்த தலைவன்

மொழி காத்த தலைவன்





மாந்த குல வாழ்வில் மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் அவனுக்கான நிலத்தை அவன் வரையறுத்துக் கொண்டான். அந்த நிலம் அவன் வாழ்வோடு ஒன்றி ஒவ்வொரு அசைவிலும் அந்த நிலம் அவனோடு பேசியது. அந்த நிலத்திலிருந்து அவன் அவனுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டான். அதுவே அவனுக்கு உயிராதாரமாய் இருந்தது. அந்த மண்ணுக்கு நன்றியுடையவனாக அவன் வாழ்ந்து வந்தான். எந்த நிலையிலும் சொந்த மண்ணிற்கு துரோகம் இழைக்கக்கூடாது என்பதிலே அவன் தெளிவாக இருந்தான்.

ஆகவே, உறவைப்போல அந்த மண்ணையும் அவன் உறங்காமல் காத்தான். உயிர்போல் நேசித்தான். காரணம் அவன் வாழ்ந்த மண் என்பது அவன் மூதாதையரை உருவாக்கிய மண். தமது மூதாதையர் அந்த மண்ணிலேதான் வாழ்ந்து களித்து, சிரித்து இவனை படைத்துவிட்டு அந்த மண்ணிற்கே உரமாகி போனார்கள். ஆகவே தமது மூதாதையரின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு இன்னமும் நினைவாய் இருக்கிறது.

தமது மூதாதையரின் பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம், பழக்க வழக்கங்கள் அதைவிட மேலாக அவர்கள் விட்டுச் சென்ற மொழி அவனை அந்த மண்ணைவிட்டு பிரிக்க முடியாமல் செய்கிறது.ஆகவே அந்த மண் என்பது அவன் உயிர்வலி. அந்த மண் என்பது அவனின் உணவாதாரம். அந்த மண் என்பது அவனின் வாழ்வு. அவனின் இலக்கியம். அவன் வாழும் கலாச்சாரம். இது வாழ்ந்து முடித்த புத்தகம் மட்டுமல்ல. வாசித்து வாசித்து தமது வருங்காலத்திற்கு விட்டுச் செல்லக்கூடிய ஒரு பெரும் பொக்கிஷம். ஆகவேதான் மண்ணை நேசிப்பது என்பது மனிதனுக்குள் ஒரு சிறப்பு வாய்ந்த அசைக்க முடியாத, விட்டுக் கொடுக்க முடியாத பேராற்றலாய் உரைந்து போயிருக்கிறது. அவன் வாழ்வு அந்த மண்ணிலேதான் செதுக்கப்பட்டது. அந்த மண்ணில் வீசும் காற்று இவன் மொழியை சுமந்து கொண்டு சுற்றி சுற்றி அவனுடைய காதிலே பாடல்களாக, இசையாக மொழிமாற்றம் செய்து இவனை மகிழ்விக்கிறது.

அந்த காற்று சுமந்து செல்லும் இசையிலே இனிமை இருக்கிறது, காதல் இருக்கிறது, கருணை இருக்கிறது, அன்பு இருக்கிறது, தாலாட்டு இருக்கிறது, இறுதியாக ஒப்பாரியும் இருக்கிறது. ஆகவேதான் ஒப்பற்ற அந்த மண்ணை அவன் ஒருபோதும் மறக்க முடியாதவனாக மாறிப் போகிறான். தமக்கு தீங்கு வந்தபோதிலும்கூட தாங்கிக்கொள்ளும் அவன் தன் மண்ணுக்கு தீங்கு என்றவுடன் வீரிட்டு எழுகிறான். தன் மண்ணுக்கு கலங்கம் என்றவுடன் கனலாகிறான். காரணம் அந்த மண் அவனைக் காத்த மண். அவனை வாழ வைத்த மண். இனியும் வாழ வைக்கப்போகும் மண்.

ஆகவே ஒவ்வொரு இனமும் தன் மண்ணை நேசிப்பது என்பது தன் வாழ்வை சுவாசிப்பதற்கு சமமானது. மண் என்பது ஏதோ உயிரற்ற பொருளல்ல. அது நம்மோடு பேசும். நம்மோடு சிரிக்கும். நம்மோடு அழும். நம்மை கரம்பிடித்து அழைத்துச் செல்லும். நம்மை தாங்கிக் கொள்ளும். நம்மை சுமந்துக் கொள்ளும். ஆகவே மண் நம்முடைய மறுஉயிர். மண் நம்முடைய உணவு. மண் நமது முகம். மண் என்பது நமது மறுபரிசீலனை. நமது பிள்ளைகளுக்கு நாம் பதிவு செய்து வைக்கும் பரிசுப்பொருள்.

ஆகவேதான் மண்ணுக்கான போராட்டம் என்பது இந்த பூமிப்பந்தில் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் பெரும் பலம் படைத்த கொள்ளைக்காரர்கள் பிற மண்ணை சூறையாட தாம் நடத்தும் சமருக்கு எதிர்ச்சமர் புரிந்து நம்மை பலியாக்கிக் கொள்ள மண்ணின் மைந்தர்கள் களம் காண்கிறார்கள். ஏதோ அந்த மண் இன்றோடு அவர்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்காக அல்ல. அது தமது தலைமுறைத் தலைமுறையாய் தம்மை அடையாளப்படுத்தும் என்பதற்காக.

சிலபேர் தமிழீழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக ஏன் விட்டுக் கொடுத்துப்போகலாமே. அரசியலில் சில சலுகைகளை பெற்றுக் கொண்டு ஒத்து வாழலாமே என்றெல்லாம் பேசுகிறார்கள். அவர்களுக்கு நம்முடைய பதில் ஒன்றுதான். உயிரை கொடுக்கலாம், ஆனால் மானத்தை இழக்க முடியாது. மானம் என்பது உயிரை விட மேலானது. இது ஒரு காரணமாக இருந்தாலும் மேலும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு இனத்திற்கான அடையளம் என்பது அந்த இனம் பேசும் மொழி. மொழியை இழப்பது என்பது உயிரை இழப்பதற்கு சமமானது.

இன்று உலகில் பேசப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான மொழிகள் அழிந்து விட்டது. நூற்றுக்கணக்கான மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றன. இந்த மொழிகள் அழிவதற்கு காரணம் என்ன என்று ஆழ்ந்து யோசித்தோமேயானால் அவர்கள் தமது மொழி அடையாளமான மொழியை தாங்கிக் கொண்டிருந்த, மொழியை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த, மொழியை பதிவு செய்து வைத்துக் கொண்டிருந்த தமது சொந்த மண்ணை இழந்தார்கள்.இப்போது அந்த மண்ணோடு அவர்கள் பேசிய மொழியும் புதைந்து போனது. வாழ்பவர்கள் மட்டும் பேசினார்கள். தமது பிள்ளைகள் வந்தவர்களின் மொழியை பேசினார்கள். ஆகவே தம் மூதாதையரின் மொழி என்னதென்று அவர்களுக்கு தெரியாமலேயே போனது.

தமக்கான மொழி அடையாளத்தை மட்டுமல்ல, இன அடையாளத்தையும் அவர்கள் இழந்து விட்டார்கள். ஆகவேதான் அந்த மொழியோடு சேர்ந்து அவனின் இனமும் அழிந்தது. அந்த மொழியோடு சேர்ந்து அவன் இலக்கியமும் அழிந்தது. அந்த மொழியோடு சேர்ந்து அவனின் கலாச்சாரம் அழிந்தது. நாளடைவில் அவனே அழிந்து போனான். அவனுக்கென்று ஒரு அடையாளம் இல்லாமலேயே போனது. நாளைய வரலாற்றில் அவனைப்பற்றி வாசிக்க யாரும் இல்லை. அவனைப் பற்றி யோசிக்க எவரும் இல்லை. அவனை யாரென்று யாருக்கும் தெரியாது.

ஆனால் தமிழ் அப்படிப்பட்டதா? கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய மூத்தக்குடி அல்லவா? அதை எப்படி இழப்பது? அதை காப்பது நமது கடமையல்லவா? ஆகவேதான் தாய் தமிழகத்தில் மொழி இழந்து, மொழிக்கான அடையாளத்தை இழந்துக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் தமிழீழத்தில் ஒரு மாவீரன் தோன்றினான். இனி உலகு உள்ள நாள்வரை தமிழுக்கென்று ஒரு அடையாளத்தை அவன் தக்க வைத்தான். தமிழினத்தின் முகவரியை அவன் உலகெங்கும் அனுப்பினான்.

இனி எந்த காலத்திலும் தமிழ், தமிழினம், தமிழ்மொழி சிதைவுக்கு சிறிதும் இடம் இருக்காது. இதை ஏழு கோடி மக்களுக்கு மேல் வாழும் தமிழ்நாடு செய்யாத நிலை இருக்கும்போது சில லட்சம் மக்கள் மட்டுமே வாழும் தமிழீழம் செய்து முடித்தது. காரணம் அவர்கள் தம் இனத்தின் அடையாத்தைக் காக்க தமது உயிரை துச்சமென மதித்தார்கள். பாரதிதாசன் சொல்வாரே ‘எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்களினம் என்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் திணை அளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் எனக்கு திருநாள்’ என. அந்த புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளை அவர்கள் முற்றிலுமாய் உள்வாங்கி களத்திற்கு வந்தார்கள்.

தமக்கான ஒரு நாடு இருந்தால்தான் நமக்கான மொழியை காக்க முடியும் என்பதை அந்த மாபெரும் தலைவன் முற்றிலுமாய் உணர்ந்திருந்தான். இந்த 21ஆம் நூற்றாண்டில் ஈடுஇணையற்ற அறிவியல் சாதனங்களை மொழி போராட்டத்திற்கு பயன்படுத்தத் தொடங்கினான். இனம் காக்கும் போருக்கு உயிரை பலியாக்கும் தற்கொலையாளர்களை தந்துதவினான். ஒவ்வொரு உயிரின் இழப்பிலிருந்தும் ஓராயிரம் தமிழ் ஓசை உலகை சூழ்ந்தது. ஒவ்வொரு களபலியிலும் தமிழ் இனத்தின் அடையாளம் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.தனக்கென ஒரு மண் தேவையா? என்று மானங்கெட்டவர்களும், மதிக்கெட்டவர்களும் மாறி மாறி பேசுகிறார்கள்.

ஒருவேளை தமிழ்நாடு தனிநாடாய் இருந்திருக்குமேயானால் இங்கிருந்து இப்போதிருக்கும் நிலை இருந்திருக்குமா? இங்கு நமக்கான மொழி அடையாளம் இருக்கிறதா? தமிழ் பேச மக்கள் இருக்கிறார்களா? நமக்கான தமிழ் கல்வி இருக்கிறதா? கலப்பின மொழியாக அல்லவா தமிழ் மொழி மாறிவிட்டது. நமக்கான மொழி, நமது உயிராதாரம், நமது அடையாளம் என்ற உணர்வு யாரிடமாவது உயிரோட்டமாக காணப்படுகிறதா? வீதியெங்கும் ஆங்கிலப் பள்ளிகளும், ஆங்கில மோகமும் நம்முடைய தமிழ் மொழி சிதைவிற்கு பெரும் காரணமாகி விட்டதே. அதை மாற்றுவதற்கான மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு அடிப்படை முயற்சியைக் கூட நம்முடைய தமிழ் தலைவர்கள் செய்யாமல் அவர்கள் தேசிய இனத்தின் அடையாளத்தை அழித்துக் கொண்டிருக்கும் தமிழ் துரோகிகளாக மாறிவிட்டார்களே! இதை நம்மால் மறுக்க முடியுமா? மறக்க முடியுமா?

ஆகவேதான் நமக்கு கிடைத்த ஒரு சிறு பயணப்பாதையை நாம் எந்த நேரத்திலும் இழக்கக் கூடாது.இதை புரிந்து கொள்ளும்போது நமக்கு தமிழீழத்தின் கட்டாயம் புரியும். நம்முடைய தமிழ் மண்ணின் அவசியம், நமக்கான ஒரு நிலம் தேவை என்பதற்கான அடிப்படை தன்மைகள் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஆகவே நாம் தமிழீழத்தை ஆதரிப்பதென்பது நமது மொழியை ஆதரிப்பது. தமிழீழ மண்ணை மீட்டெடுப்பதென்பது நம்முடைய வருங்காலத்தின் அடையாளத்தை மீட்டெடுப்பது. தமிழீழத்தின் போராட்டத்தை ஆதரிப்பதென்பது நம்மையே நாம் ஆதரித்துக் கொள்வது. ஆகவே தமிழ் துரோகிகளின் கூட்டத்திற்கெதிராக ஒரு மண்ணின் அடையாளத்தை எத்தனை எத்தனை மரணங்கள் வந்தாலும் அத்தனை மரணங்களையும் மரணிக்க வைத்து ஒரு மறப் போராட்டத்தை அற தன்மையோடு அகிலத்திற்கே அறிவித்துக் கொண்டிருக்கும் மொழி காக்கும் அந்த தலைவனை இனம் காக்கும் அந்த தலைவனை நாம் ஆதரித்தே தீர வேண்டும்.

அத்தலைவனை ஆதரிக்கும்போது ஏற்படும் துயர்களை நாம் தூசாக கருதவேண்டும். அத்தலைவனை ஆதரிக்கும்போது இன்னல் நமக்கு ஏற்படும் என்றால் அது இனிதே என்பதை நாம் உணர வேண்டும். காரணம் அத்தலைவன் நமக்கான தலைவனல்ல. நம் எதிர்கால தலைமுறைக்கும் தலைவன். தமிழ் மொழியை காப்பதற்காக, இன அடையாளத்தை மீட்பதற்காக களம் கண்ட தலைவன். பெரும் ஆற்றல் வாய்ந்த படைகட்டி அதிலிருந்து பணம் ஈட்டி தமது குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் தன்னல தலைவனல்ல நாம் பெற்றிருக்கும் தலைவன். அவனைப் பெறுவதற்கு நாம் பெரும் பேறு பெற்றிருக்கிறோம். ஆகவேதான் ஒரு மொழி அழியும் காலத்திலே அதை மீட்பதற்காக அவன் இயற்கையாக தோன்றியிருக்கின்றான்.

எந்த ஒரு போராட்டக் காலமும் அதற்கான தலைவர்களை தாமகத்தான் தோற்றுவிக்கும். தலைவர்களை மனிதர்கள் உருவாக்க முடியாது. வரலாறு தான் தலைவர்களை உருவாக்கி படைத்தளிக்கும். நம்முடைய புலிநிகர் தலைவனும் அப்படி படைத்தளிக்கப்பட்ட ஆற்றல் வாய்ந்தவன். ஆகவேதான் வெறும் இந்தியர்கள் வாழ்கிறார்கள் என்ற நிலை மாறி தமிழர்கள் வாழ்கிறார்கள் என்கின்ற வரலாற்று வரிகளை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வாழ்ந்த தமிழ் மொழிக்கு புதிய அடையாளத்தை உருவாக்கித் தந்தான். இப்போது நமக்குப் புரிகிறது. அந்த தலைவனின் போராட்டம் என்பது அந்த மண்ணை மீட்டெடுக்க வேண்டும் என்பது தமிழீழ களம் அமைத்தது தன்னலத்திற்காக அல்ல. இந்த போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்களை கள பலியாக்கியது ஏதோ போர் வெறியால் அல்ல. அது நமது மொழியை காப்பதற்கான போராட்டம். நம்முடைய இன அடையாளத்தை காப்பதற்கான போராட்டம்.

தமது மொழியை எந்த அளவிற்கு அவன் நேசித்தானோ, அதே அளவிற்கு அவன் அந்நிய மொழியையும் ஆழமாய் நேசித்தான். எந்த நிலையிலும் தான் எதிர்க்கும் அடக்குமுறையாளர்களுக்கெதிராக சமர் புரிந்தானே ஒழிய, அந்த இனத்தின் அடையாளத்தையோ, அந்த இன கலாச்சாரத்தையோ, பண்பாடு பழக்க வழக்கங்களையோ, அவர்கள் வாழ்க்கை முறைகளையோ எந்த நிலையிலும் எக்காரணம் கொண்டும் அவன் எதிர்த்தது கிடையாது. இதுவே அவன் தமது தாய்மொழியை எந்த அளவிற்கு நேசித்தான் என்பதை நமக்கு அடையாளம் காட்டுகிறது. தமது மொழியை நேசிக்கும்போதுதான் நாம் அந்நிய மொழியை நேசிக்கத் தொடங்குவோம். அந்நிய மொழியை நசுக்கும்போது நம்மை அறியாமலேயே நாம் நம் மொழியை நசுக்கி சிதைவடையச் செய்து விடுவோம் என்பதை அந்த தலைவன் உணர்ந்திருந்தான்.

ஆக இந்த மண்ணை நேசிப்பதென்பது தமது மொழியை காப்பதற்கான அடையாளம் என்பதை நாம் புரிந்து கொள்ளவே உயிர்பலி தந்து மண்ணை காக்கும் போராட்டத்தை அந்த மாபெரும் தலைவன் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றான். மண்ணை காப்போம், மொழியை காப்போம், இனத்தைக் காப்போம், நமக்கான ஒரு தாயகம் அமையும் வரை இடைவிடாது சமர்செய்வோம். அது நமது இழப்பிற்குப் பின் நம்முடைய சந்ததிக்கு மகிழ்ச்சியைத்தரும். அந்த மொழி காத்த தலைவனின் வழி நின்று வாழ்வோம்.

-கண்மணி-

ஈழம் முதலாவது கொரில்லாத் தாக்குதல்

ஈழம் முதலாவது கொரில்லாத் தாக்குதல்



தங்கதுரை, குட்டிமணி, சின்னஜோதி உள்ளிட்டவர்களுடன் பிரபாகரனும் இந்தியா தப்பி வந்தார். ஆரம்பத்தில் பிரபாகரன் வேதாரண்யத்தில் தங்கினார். யாருடனும் அதிகம் பழக்கமில்லை. செலவுக்குக்கூட பணம் இல்லை. பின்னர் சென்னைக்கு வந்து கோடம்பாக்கம் பகுதியில் தங்கியிருந்த தங்கதுரை உள்ளிட்டோருடன் தங்கினார். அப்போது ஜோதி இந்தக் குழுவிலிருந்து விலகிவிட்டார்.

பிரபாகரனுக்கு சென்னையில் இருப்புக் கொள்ளவில்லை. அவர் இலங்கை செல்ல விரும்பினார். தங்கதுரை உள்ளிட்டோர், "இலங்கைக்கு இப்போது செல்வதோ - குழுவாக வேலை செய்வதோ தற்சமயம் சாத்தியமில்லை. அதற்கான நேரம் வரவில்லை' என்று தடுத்தனர்.

குட்டிமணியைத் தஞ்சவூரில் கைது செய்து (1973 நவம்பர் 18) இலங்கை அரசிடம் தமிழக அதிகாரிகள் ஒப்படைத்த பிறகும் தலைமறைவு வாழ்க்கையை இந்தியாவில் தொடர்வது சாத்தியமில்லை என உணர்ந்த பிரபாகரன் சென்னையிலிருந்து கிளம்ப முடிவு செய்தார். அவருக்கு இன்னொரு குழுவைச் சேர்ந்த தனபாலசிங்கம் என்கிற செட்டியைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

அவர் பிரபாகரனைத் தனது குழுவில் சேர்ந்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதுகுறித்து தங்கதுரையிடம் தெரிவித்ததும், "செட்டி நல்லவர் அல்ல. அவருக்கு விடுதலைப் போராட்டம் மட்டுமே நோக்கம் அல்ல; அவரை நம்பிப் போக வேண்டாம்' என்று அவர் தடுத்தார்.

இயங்க வேண்டும் என்ற வெறி, பிரபாகரனை "செட்டியை'த் தொடர வைத்தது.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்த செட்டி என்கிற தனபாலசிங்கத்துடன் சேர்ந்துகொண்டார். இந்தக் குழுவின் ஆரம்பகால நோக்கம் அரசு ஆதரவாளர்களையும், போலீசுக்குத் தகவல் கொடுப்பவர்களையும் தண்டிப்பதுதான்.

இந்தச் சமயத்தில் தமிழ் தேசிய அரசியல் பார்வைக்கு இவர்களை முழுமையாகத் திருப்பியவர் தமிழரசுக் கட்சியிலிருந்த ஏ.இராஜரத்தினம்தான். அவரால் உற்சாகப்படுத்தப்பட்டு (1972) ஏற்பட்ட இயக்கத்துக்கு "தமிழ்ப் புதுப்புலிகள்' (பஹம்ண்ப் சங்ஜ் பண்ஞ்ங்ழ்ள்-பசப) என்று பெயர் வைத்துத் தொடங்கினர். செட்டி அவ்வப்போது கைது செய்யப்படுவதும் விடுதலையாவதுமாக இருந்தார்.

"செட்டி'யை நம்பிப் போக வேண்டாம் என்று சொன்ன தங்கதுரையிடம், "என்னை அவர் வழிக்குக் கொண்டு செல்ல முடியாது - முடிந்தால் அவரைத் திருத்துவேன்' என்று சொன்ன பிரபாகரனால் அவரைத் திருத்த முடியவில்லை என்பது உண்மையாகிப் போனது. இயக்க முடிவுகளுக்கு ஏற்ப அவரைத் தண்டிக்க வேண்டியதாயிற்று.

பின்னர், பிரபாகரன் குழுவினர் குட்டிமணி, தங்கதுரையுடன் மீண்டும் இணைந்தனர்.

அதுவும் சிறிது காலம்தான். அதன்பின்னர் தமிழ்ப் புதுப்புலிகள் இயக்கத்துக்கு பிரபாகரன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

இதுகுறித்து பிரபாகரன் தெரிவித்ததாவது:

""பின் 1976-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று இயக்கம் புதிய பெயரைச் சூட்டிக்கொண்டது. இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே உறுதியும்-அர்ப்பணிப்பும்-பேரார்வமும் கொண்ட இளம் புரட்சிவாதிகளை அது பெருமளவில் ஈர்த்துக்கொண்டது. நகர்ப்புற கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டது. தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற லட்சியத்தில் தோய்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் விரைவிலேயே தமிழ் மக்களின் புரட்சிகர ஆயுதப்போராட்ட இயக்கமாகப் பரிணமித்தது. விஞ்ஞான சோசலிசக் கோட்பாட்டை வரித்துக்கொண்ட புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேசியப் போராட்டத்தின் முன்னணி ஆயுதப்படையாக தன்னை நிறுவிக்கொண்டது'' என்பதாகும். (1985-ஆம் ஆண்டின் வெளியீடான "விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு').

அதே வெளியீடு தங்களின் போர்முறையையும் தெளிவாகக் கூறுகிறது: ""ஆயுதப் போராட்டமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட கொரில்லாப் போர்முறையானது நமக்கு மிகவும் பொருத்தமான போர் வடிவமாகும். நிராயுதபாணிகளான வலிமை குறைந்த தமிழ் மக்கள், சிங்கள இனவாத அரசின் பெரிய ராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கொரில்லா யுத்தப் பாதையே பொருத்தமானது என்பதால், இந்த யுத்தியைக் கையாண்டோம்'' என்றும் கூறுகிறது.

தொடர்ந்து அவர்களின் தாக்குதல் குறித்து அவ்வெளியீடு கூறுகையில், ""அரசின் ஆயுதப்படைகளைக் கிலி கொள்ளச் செய்து அவர்களது மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் குலைத்துவிட்ட எமது கொரில்லாப் போர் முறையானது. ஸ்ரீலங்கா அரசு அமைப்பையே ஆட்டங்காணச் செய்திருப்பதுடன் தமிழர் பிரச்னையை சர்வதேசப்படுத்தவும் உதவியுள்ளது'' என்று தெரிவிக்கிறது.

இவ்வியக்கத்தின் நோக்கம் என்னவென்பது குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் விவரிக்கையில், ""கொரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து, அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையைப் பெரும்பாலான மக்கள் போராக விரிவாக்குவதே எமது நோக்கமாகும்'' என்றும் தெளிவுபடுத்துகிறது.

அவ்வெளியீட்டில் அதன் ஆரம்பகால நடவடிக்கைகள் குறித்தும், அதன் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால், ""எமது இயக்கத்தின் ஆரம்பாகால நடவடிக்கைகள் போலீஸ் உளவுப்படையைச் சிதைப்பதை மையமாகக் கொண்டிருந்தது. போலீஸ் உளவுப்படையில் போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்ல; எமது இயக்க நடவடிக்கைகளைப் பற்றி தகவல்கள் வழங்குவோரும் துரோகிகளும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் எம்மைப் பற்றி அளிக்கும் தகவல்களுக்கு ஈடாக, சன்மானமாக பெருந்தொகையை ரகசியமாகப் பெற்று வந்தனர். இந்த உளவு அமைப்பானது, அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்த விடுதலை அமைப்புக்கு, பொதுவாக தமிழர்களின் தேசியப் போராட்டத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. ஆகவே அவ்வகை போலீஸ் அமைப்பைச் சிதைப்பதையே நோக்கமாகவும் செயலாகவும் கொண்டிருந்தது.

இரண்டாவது நடவடிக்கை, தமிழ் ஈழத்தில் போலீஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்வதை மையமாகக் கொண்டிருந்தது.

மூன்றாவதாக, எமது கொரில்லாப் போராளிகள் ராணுவப்படைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர்'' என்று தங்களது கொள்கைத் திட்டத்தை அவ்வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தமிழர் துரோகி எனக் குற்றஞ்சாட்டப்பட்ட, யாழ்ப்பாண நகர மேயர் துரையப்பாவின் கொலையைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் அமைப்பு பிரபலமடைந்ததுடன் பிரபாகரனும் பிரபலமடைந்தார்.

துரையப்பாவின் மரணத்தைத் தொடர்ந்து உரும்பராயில் அரசு உருவாக்கிய புதிய உளவுப்படைப் பிரிவு அமைக்கப்பட்டது. அந்தப் பிரிவு முழுவதுமாக விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டது.

உளவாளிகள் ஒழிப்பு மாவிட்டபுரத்திலும், இனுவிலிலும் தொடர்ந்து நடத்தப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி எம்.பி.எம்.கனகரட்னம் யு.என்.பி.க்குத் தாவினார். இவரின் செயல் துரோகச் செயலாகக் கருதப்பட்டதையொட்டி, கொழும்புவிலுள்ள கொள்ளுப்பட்டியில் உள்ள இல்லத்தில் சுடப்பட்டு, தப்பினாலும் பின்னர் அவர் மரணம் நேர்ந்தது.

இந்தச் சம்பவத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளைத் தேடித்தேடி வேட்டையாடினார்கள். இதிலும் சித்திரவதைப் புகழ் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் ஈடுபட்டதையொட்டி அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அடுத்தடுத்து விடுதலைப் புலிகளால் நேர்ந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அவ்வியக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டு மே மாதம் "விடுதலைப் புலிகள் மற்றும் இதுபோன்ற இயக்கங்களைத் தடை செய்தல் சட்டம்' பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் பாதுகாப்புப்படையினருக்கு சகலவிதமான அதிகாரங்களையும் வழங்கியது. விடுதலைப் புலிகள் நடவடிக்கைகளை ஆதரிப்பதாகச் சந்தேகப்படும் எந்த நபரின் சொத்துகளும் பறிமுதல் செய்யவும் சட்டம் வகை செய்தது.

"ஆனால், அரசு நினைத்ததற்கு மாறாக, இச்சட்டமானது எமது இயக்கத்தைப் பிரபலப்படுத்தியதுடன், எமது இயக்கத்துடன் தொடர்பு கொள்வது ஆபத்தானது என்று தெரிந்தும், தமிழ்மக்கள் தங்களது ஆதரவை வழங்கியதாக' இவர்களின் வெளியீடு கூறுகிறது.

1978-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-இல் ஜெயவர்த்தனாவுக்கு சர்வ அதிகாரங்களையும் வழங்கும் அரசியல் சட்டம் நிறைவேறியது. இதன் மூலம் அரசின் தலைவர், முப்படைகளின் தளபதி, அமைச்சர்களை நியமிக்க, விலக்க, நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிகாரம் வழங்கப்பட்டது. சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அதே நாளில், விடுதலைப் புலிகள் "ஆவ்ரோ' விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்த்து வெளிப்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக 1979, ஜூலை 20-இல் பயங்கரவாதத் தடைச் சட்டமும் அமலுக்கு வந்தது. 18 மாத காலம் ஒரு நபரைத் தனிமைச் சிறையில் வைக்கலாம். அதுமட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தில் அவசரச் சட்டமும் பிரயோகிக்கப்பட்டது. முன்பே விவரித்திருந்தது போல பிரிகேடியர் வீரதுங்கா பயங்கர அடக்குமுறைகளைக் கையாண்டார்.

இதன் காரணமாக 1979 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தாற்காலிகமாகத் தள்ளிப்போட்டு, இயக்கத்தை பலப்படுத்துவதில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டனர். 1980-இன் முற்பகுதியில் தங்கதுரை, குட்டிமணி தலைமையில் இயங்கிய தமிழீழ விடுதலை இயக்கத்துடன் கூட்டாகச் சேர்ந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவெடுத்தது. நீர்வேலி வங்கிக் கொள்ளையை அடுத்து, தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து இவ்வியக்கத்துடனான உறவு முடிவுற்றது.

பிரிகேடியர் வீரதுங்கா, மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று ராணுவத் தளபதியானார். யாழ் படுகொலையைக் கெüரவிக்கவே இந்த உயர்வு வழங்கப்பட்டதால், அதைக் கண்டிக்கும் வகையில், காங்கேயன்துறை வீதியில் ராணுவ ஜீப் ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்கியதில் இருவர் பலியானார்கள். விடுதலைப் புலிகள் வரலாற்றில் ராணுவத்தின் மீதான முதலாவது கொரில்லாத் தாக்குதல் இதுவே ஆகும். இந்தத் தாக்குதலை சார்லஸ் ஆன்டனி (சீலன்) நடத்தினார். பெருமளவில் ஆயுதங்களும் இந்தத் தாக்குதலில் கைப்பற்றப்பட்டன.

இதே போன்று நெல்லியடி போலீஸ் நிலையம் மீது தாக்குதல், கடற்படையினர் மீது தாக்குதல், சாவகச்சேரி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் எனப் பல முயற்சிகள் இவ்வியக்கத்தால் நடத்தப்பட்டன.

இவ்வகையான தாக்குதல்கள் யாவும் இந்திய அரசு அளித்த பயிற்சிகளுக்கு முன்பே நடந்தவை என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டும்.

போராளிகள் வெளிநாடுகளில் பயிற்சி பெறுவது என்பது ஈரோஸிலிருந்து தொடங்கியது. பிரிட்டனில் பி.எல்.ஓ. பிரதிநிதியுடன் ஈரோஸ் பிரதிநிதிகள் தொடர்புகொண்டு பயிற்சி பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்படி லண்டனில் வாழ்ந்த ஈரோஸின் செயலாளர் ஈ.இரத்தினசபாபதி, பெய்ரூட் சென்று, அல் ஜிகாத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இதன் காரணமாக ஈரோஸ் அமைப்பின் முதல் குழு பயிற்சி பெற்றுத் திரும்பியது. அடுத்த குழுவில் விடுதலைப் புலிகளிள் சிலரையும் ஈரோஸ் அமைப்பு சேர்த்துக்கொண்டது. இவ்வாறு பயிற்சி பெற்ற போராளிகள், யாழ்ப்பாணம் பகுதியில் குழு, குழுவாகப் பயிற்சி அளித்தனர்.

எம் தமிழ் சொந்தங்களே

எம் தமிழ் சொந்தங்களே


Svr.pamini
இன்று வெளியான சனல் நன்கு வீடியோ ..நான் பார்பதோ நீங்கள் தமிழ் மக்கள் பற்பதலோ எதுவும் நடக்க போவது இல்லை ...உலக நாடுகள் உலக அமைப்புகள் மனிதநேயம் உள்ள மக்கள் பார்க்கும் படி செய்வதே எங்கள் கடமையாகும் ....அதை இளைய சமுதாயம் செய்ய வேண்டும் ....எந்த மொழியினும் அந்த மக்கள் பார்க்கும் படி பண்ணுங்கள் ...புலம்பெயர் தேசத்தில் எவளவோ திறைமையான மக்கள் இருக்கிறேர்கள் உங்களால் மட்டுமே இதை மக்களின் கைகளில் கொடுக்க முடியும் ...விரைந்து செயற்படுங்கள் நண்பர்களே சகோதர சகோதரிகளே ..நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எமது பலம் பலவீனம் ஆகிக்கொண்டு இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள் ...எம் பாசத்துக்குரிய தமிழ்நாட்டு சகோதர்களே சகோதரிகளே எமது இனம் அளிக்கபட்ட போது யாருமே எம்மினத்தை காப்பாற்ற முன்வரவில்லை ..எமது இனம் அழிக்கபட்டு இன்று அடிமைகளாக தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கிறது ...இன்னும் எமது இனத்தின் துன்பம் தீரவில்லை..இனம் அளிகபட்டபோது கண்டுகொள்ளாத உலகநாடுகள் இன்று தமிழர்கள் பக்கம் சரிவது போல் தெரிகிறது ...இந்த சந்தபர்த்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் எம் சொந்தங்களே ..இலங்கையில் இருக்கும் ஒரு தமிழனால் குட இது பற்றி பேசுவதுக்கு உரிமை இல்லை ..இப்போது அங்கெ பேச்சுரிமை மறுக்கபட்டு உள்ளது ...தமிழ்நாட்டு தமிழ் மக்களே உங்கள் கடமைகளை செய்யும் நேரம் வந்துகொண்டு இருக்கிறது ..இதை தவற விடாதீர்கள் ..நமக்கென்ன என்று இருப்பதால் வருங்கலத்தில் தமிழன் என்று சொல்ல யாருமே இருக்க முடியாது ..அரசியல் வாதிகளை நம்பி நம்பி உங்கள் ஈழ தமிழர்களை கை விட்டது போதும் ..ஒவ்வொரு தமிழனின் கடமை இது ..சற்று சிந்தியுங்கள் இந்த ஒலிநாடாவை உற்று பாருங்கள் என்ன நடந்திருக்கிறது என்று ....சகோதரிகளே இதை அவமானம் என்று பார்க்காமல் இருக்கதேர்கள் எல்லா சகோதரிகளும் பாருங்கள் ...இதில் வெக்க படவோ தலை குனியவோ ஒன்றும் இல்லை உங்களை போல சகோதரிகள் தான் இவர்கள்
இன்று அவர்களுக்கு நடந்த கொடுமைகளை நீங்களும் பாருங்கள் ....பெண்களாகிய நீங்கள் தட்டும் போதுதான் திறக்காத மனகதவெல்லாம் திறக்கும் ..உங்களால் முடியாதது என்று எதுவும் இல்லை சகோதரிகளே ...ஈழத்தில் இருக்கும் தமிழர்களுக்கு முன்று வருடங்களாக உமையகவே இருக்கிறார்கள் அங்கெ பேசும் உரிமை இல்லை ...இன்று அவர்களுக்க பேசும் உரிமை உங்களுக்கு கொடுக்கபட்டு உள்ளது ...ஈழத்தில் வாழும் வழபோகின்ர இனிவரும் சந்தததிய காப்பாற்றுங்கள் ...புலம்பெயர் தமிழர்களோடு சேர்ந்து ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு வாழ்வு அளியுங்கள் ..தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கிறார்கள் தமிழர்கள் ...கல்விமான்களே ..தமிழ் உணர்வாளர்களே கவி மான்களே அகிம்சை என்னும் ஆயுதத்தை கையிலெடுங்கள் இந்திய அரசை நேக்கி படைஎடுங்கள் ...அகிம்சைக்கு பெயர் போன இந்திய அரசுக்கு அகிம்சை வழியெலே நீதி கேளுங்கள் ...இந்திய அரசு மூலமாகத்தான் எப்போதும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் ....இந்திய அரசின் மனக்கதவுகள் திறக்க படும் போதுதான் உலகநாடுகளின் மனகதவும் திறக்கும் ...உங்கள் அன்பு உடன்பிறப்பு தமிழ் சுவை

மூவர்ண கொடியே

மூவர்ண கொடியே


*மூவர்ண கொடியே உன்
வண்ணத்தின் எண்ணம் என்னவோ ..
உன் சிவப்பு வண்ணம்
அடிமைப்படும் மக்களின் குருதியா
உன் வெள்ளை வண்ணம்
அப்பாவி மக்களின் கோவணமா
உன் பச்சை வண்ணம்
ஆட்சியாளர்களின் நிலையற்ற குணமா
சொல் உன் வண்ணத்தின்
எண்ணம் என்னவோ*

...........*தம்பி*.....