பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Friday, 17 June 2011

புரிதல் இல்ல நட்பு

*வேண்டுமோ இந்த இழிசொல்
உமக்கு நட்பு பாராட்டி
நயவஞ்சகம் செய்யும் பூமியில்!...

நன் நட்பு பாராட்டும்
உமக்கு நல்ல ஒரு
சொல்லடி அடித்ததும் வலித்தது!...

செல்லடி போல இல்லை
இல்லை செல்லடிக்கும் மேல்
உன் சொல்லடி வருகிறேன்!...

இனி இல்லை உன்னிடம்
பாராட்ட என்னிடம் நட்பு
மட்டுமல்ல நானும் கூட !!*......
*காரி உமிழ்கிறேன் என்னில்
நானே என்னை நினைத்து
போக மனமில்லை ஆனால்!....

போகாதிருக்க வலி கொள்ளவில்லை
போகிறேன் எங்கு நட்பு
என்று என்னுள் தேடிக்கொண்டு!....

அறியவில்லை வருவேனா என்று
தெரியவில்லை வந்தால் சொல்லுங்கள்
வக்கத்தவன் நீ என்று!....

வரவில்லை என்றால் தேடாது
வாழ்த்துங்கள் வரவேண்டாம் என்று
உறவுகளே உங்களுக்கு நன்றி!!*......

......*தம்பி

No comments:

Post a Comment