பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Wednesday, 15 June 2011

வேட்டையாட

வேட்டையாட

*தமிழன் குணம் அறியாது
தலைவன் என்றான் தெலுங்கன்
அன்று தலை வீழ்த்தினோம்!....

இன்று கன்னடத்தி கதைவசனம்
எழுதுகிறாள் தமிழ் தலைவி
வேடம் பூண!.....

நாங்கள் தயாராகிவிட்டோம் வேடம்
கலைத்து வேட்டையாட எங்கள்
தலைவன் தம்பியென்று!!*

........*தம்பி*........

வா என்அன்பு தங்கையே

வா என்அன்பு தங்கையே


*வா என்அன்பு தங்கையே

நாம் விடிய விடிய

விளையாடிய வீதிகள் நம்மை

தேடுது!!....


வெள்ளை மணல் வெளியில்

விளையாடி திரிகையில் துள்ளி

வந்தஅலை நம்மை காணாமல்

தேடுது!!....


பள்ளி போகையில் பாதையில்

திரியும் வெள்ளை ஆட்டுக்குட்டி

உன் துள்ளல்நடை காணாது

தேடுது!!....


கோயில் வாசலில் சாய்ந்து

நிற்கும் நாவல் மரம்

உன் பட்டுகைகள் படாததால்

தேடுது!!....


இதோ நானும் அம்மா

அப்பாவும் வாசல் நோக்கி

வந்து வந்து போகிறோம்

உன்னை தேடி!!....


ஆனால் நீயோ எங்களை

மறந்து போனதேனோ காலன்

பிடியில் கண்கள் கண்ணீரில்

தேட!!!*

.........*தம்பி*........

தமிழே நீ தலைகுனிதல் தகுமோ

தமிழே நீ தலைகுனிதல் தகுமோ


*தமிழே நீ தலைகுனிதல் தகுமோ..

தமிழன் என்று எங்களை தலைநிமிர

செய்த நீ தலைகுனிதல் தகுமோ!!...



செந்தமிழே எம் தீந்தமிழே..

உன்னை தீண்டுவார் வாழத்தகுமோ

உன்னை தாங்குவார் யாம்இருக்க!!...



அன்னைத்தமிழை அடகு வைத்தவர்கள் ..

மத்தியில் ஆளவைக்க நினைக்கும்

உனைபோன்ற ஆண்மகன் உண்டோ!!...



உன் சீரிய குரலால்..

எம்மை சீர்படுத்திய உன்

சீற்றத்திற்கு உண்டோ சிறைவாசம்!!...



சோழனின் வீரத்தையும் தமிழனின்

மானத்தையும் ஒருங்கே பெற்ற

தம்பியின் தளபதியே தமிழ்மகனே!!...



தம்பியின் வழியில் தமிழ்..

காணத்துடிக்கும் உன் பின்னால்

நிற்போம் தம்பியின் தம்பிகள்!!...



தேசியத்தை உடைத்தெறிந்த எங்கள்..

தமிழ் தேசியமே நாம்

காண்போம் தமிழீழ தேசியம்!!!

.......*தம்பி*......

பொக்கிஷம்

பொக்கிஷம்


*பெருமைகள் தேடி வந்தபோதும்

பொறுமைகள் காத்தவன் நீ..

வறுமைகள் வாட்டிய போதும்
வாடாத கொள்கையாளன் நீ..

துன்பங்கள் உன்னை துரத்தியபோதும்
துவளாத துணிச்சல்காரன் நீ..

சான்றோர் கூடிய சபையில்
வாழ்ந்த ஆன்றோன் நீ..

கடமை தவறா கண்ணியமான
கரிகால வேந்தன் நீ..

பெண்மைக்கு இலக்கணம் தந்த
நன் இலக்கியவாதி நீ..

ஆண்மைக்கு என்றும் ஒரு
அழியா இலக்கியம் நீ..

பாசத்தில் உனை வெல்ல
பச்சிளம் குழந்தை நீ..

போரில் விளையாடும் வீர
தமிழ் புலி நீ..

பாரில் உனக்கு என்றும்
நிகர் நீயே நீ..

ஈன்ற மகனை இனத்திற்க்குதந்த
உம்மை .....வர்ணிக்க இயலாதவன் .......நீ.........
எங்களின் மாபெரும் பொக்கிஷம் நீ*


............*தம்பி*....

*வீரம் அறிவு புரட்சி கொஞ்சம் வாழ்க்கை

*வீரம் அறிவு புரட்சி கொஞ்சம் வாழ்க்கை


எம் உறவுகளே இது நாம் சந்தோசம் பட வேண்டிய தருணம் அல்ல ....சிந்திக்கவேண்டிய தருணம் .....ஆம் ...துரோகியிடம் இருந்த மாலையை பறித்து எதிரி கையில் கொடுத்துஉள்ளோம் ...ஆனால் ...இரண்டும் ...குரங்கு தானே ....அதன் கையில் கொடுத்த பூமாலையான..நாம் ..எவ்வாறு சந்தோசப்பட முடியும் .....ஆம் ...நம் இன அழிப்புக்கு காரணமான காங்கிரஸ் அதன் கூட்டு திருடன் திமுக ஆகியவற்றை நாம் தோல்வியை தழுவ செய்து நம் ஒற்றுமையை வெளிபடுதியுள்ளோம் ...அதே நேரம் ..நாம் அதிமுக கையில் வெற்றியை கொடுத்துள்ளோம் .....அவர்கள் என்றுமே நம் இனத்திற்கு எதிரான முடிவுகளையே எடுப்பார்கள் .....ஆதலால் எம் உறவுகளே ....இந்த ஒற்றுமையுடனே ...நமக்கான சுதந்திரத்தை முன்னெடுக்க வாருங்கள் ....என்று நம்மை நாம் ..ஆளும் நிலை வருமோ ..அன்று நாம் சந்தோசபட்டுகொள்ளலாம்....உறவுகளே ......



*வீரம்

அறிவு

புரட்சி

கொஞ்சம் வாழ்க்கை*.......

*நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு இன்று கிடைத்த பலன் ...காங்கிரஸ் கருவறுப்பு ..ஆம் உறவுகளே தேர்தல் முன்பிருந்தே எம் இயக்கத்தினர் பணியை தொடங்கி ...இந்தநிமிடம் வரை காங்கிரஸ் கருவருப்பே ..எங்கள்..முழக்கம் .......உடல் முடியாத நிலையில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்திலும் கூட எமக்கு எம் இனத்தை கருவறுத்த காங்கிரஸ் கருவருப்புக்கு பின் தான் என் நலம் என்று கூறி ...எங்களை உற்சாகம் படுத்தி ..எங்களுடன் 63 தொகுதிகளிலும் முழங்கினார் எம் அண்ணன் ஆம் என் அன்பு*செந்தமிழன் சீமான்*....இந்த நொடி கூட எமக்கும் எம் இயக்க உறவுகளுக்கும் நிம்மதி இல்லை.... ஆம் எஞ்சிய சில காங்கிரஸ் கயவர்களை கருவருக்கும்வரை ....உறவுகளே உதவுங்கள் உங்கள் உறவுகள் வேண்டி நிற்கிறோம் உங்களிடம்*.....**நாம் தமிழர்** .......





*இளம் தமிழர்

எரிமலை வெடிக்கட்டும்!

நம் இனத்தின்

விடுதலை பிறக்கட்டும்!!*........

*வரும் மே 18 நம் இனம் அழிக்கப்பட்ட நாள் ..ஆம்...என்.....கண்ணில் ..அந்த கொடுமைகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை .....

அந்த நாளில் நம் எழுச்சியை உலகுக்கு உணர்த்துவோம் ..உறவுகளே ...ஒன்று கூடுங்கள் உங்கள் ஊர் வீதிகளில் முழங்குங்கள் உலகம் அதிர ..நம்..உறவுகளுக்கு ....இரங்கல் குரலாக ......நமக்கு ......விடுதலை குரலாக* ...



மார்தட்டி வாட மறத்தமிழா

மானமும் அறிவும் நமக்கு அழகு

மண்டியிட்ட இனம் எல்லாம்

நம்மிடம் வீரத்தை கற்று

விலை கேட்டது சுதந்திரத்தை!!!...



பூப்பறிக்கும் பெண்கள் மத்தயில்

புலியாய் பாய்ந்தது நம் பெண்கள்

கலை பயின்ற காலம் போயி

களை எடுக்க வந்தனர் நம் பெண்கள்

காளைகளே திமிறி வா களையெடுக்க பகைவரை !!!...



ஆட்டம் கண்ட இனம் எல்லாம்

ஆட்சி அமைக்க முடியும் போது

காட்சி பொருளாய் கட்சி சார்பில் இருப்பதேன்

களம் காண்போம் வா கரிகாலன் வம்சமே

ஆட்சி அமைப்போம் நமக்கென்று நாமே

நம் தலைவன் வகுத்த வழியில் தமிழகத்தை ஆள்வோம்!!!

...........*தம்பி*.......

உறவுகளே இங்கு நான் வேதனையாக இந்த பதிவை பதிவது ரசிக்க அல்ல சிந்திக்க

*உறவுகளே இங்கு நான் வேதனையாக இந்த பதிவை பதிவது ரசிக்க அல்ல சிந்திக்க!!!* .....





*என் அன்பு மகனே ...

அன்று உன்னை சுமந்தேன்

நாளை உன்உறவையும் சுமப்பேன்

சுமையாக அல்ல சுகமாக ...

என் அன்பு மகனே!!....





கருவறையில் இடம் தந்த எமக்கு

உன் வீட்டு சமயலறையிலாவது

இடம் கொடு...

என் அன்பு மகனே!!...





உன் வீட்டில் மிஞ்சிய

உணவை கொடு என்

ஆயுள் முழுதும் உழைப்பை

தருகிறேன் இலவசமாக ...

என் அன்பு மகனே!!....





அம்மாவாக ஏற்காவிட்டாலும்

உன்னையும் உன்வீட்டையும் காக்கும்

காவல் நாயாகவது ஏற்றுகொள்....

என் அன்பு மகனே!!....





போக இடமுமில்லை உன்னை

பிரிய மனமுமில்லை வாழ்ந்துவிட்டு

போகிறேன் இறுதிவரை உன் காலடியில் ...

என் அன்பு மகனே!!....





நாளை உனக்கு என்

நிலை வராது இருக்க

வேண்டிக்கொள்கிறேன் உன் மகனை....

என் அன்பு மகனே!!!!!*...........*தம்பி*....

*தலைவனுக்கு ஒரு முன்னுதாரணம்

*தலைவனுக்கு ஒரு முன்னுதாரணம்

நல்ல தலைமைக்கு இவரே
உதாரணம்!....
இளமைக்கு இவரே வழிகாட்டி
நல்ல இளவலுக்கு இவரே
துணை!.....
அறிவுக்கு இவரே
உதாரணம் ஆளுமைக்கு இவரே
முன்னுதாரணம்!.....
அன்புக்கு இவரே
இலக்கணம் பகைவர்க்கு இவரே
தலைக்கனம்!.....
புரட்சிக்கு இவரே
ஆசான் நல் மனிதனுக்கு இவரே
ஆதாரம்!!*.......*தம்பி*....

இந்த பாரிய தேசத்தில்

*இந்த பாரிய தேசத்தில்
எம் பாரிய தலைவன்
போல் உண்டோ ..நல்
தலைவன் நல் தமிழன்
நல்லவர்களின் நாயகன் ..நாடி
வருபவர்களின் நண்பன்!..
பகைவர்களுக்கு எதிரி ..நல்
பகுத்தறிவுக்கு நண்பன்!..
பசியில் வாடுபவர்களுக்கு ..நல்
பகிர்ந்தளிக்கும் பங்காளன்!..
ஏழை மக்களுக்கு ..நல்
ஏற்றமளிக்கும் எல்லாளன்!..
கடமையில் தவறாத ..நல்
கண்ணியமான காவல்காரன்!..
கயவர்களுக்கு கருவறுக்கும் ..நல்
களமாடும் கரிகாலன்!!

*........*தம்பி*.

நாளை உனக்காகவே உருவாவோம்

*உயிரின் மேலான மானம்!!!*.....





*குருதி கறைபடிந்த கைகளாலான

இழவெடுத்த இத்தாலி சோனியாவே

உன் இனம் அறியுமா

மானமும் வீரமும் மனிதர்க்கு

அழகென்று போதித்தவன் தமிழனென்று!!....



நீ அறிவாயோ எம்புலி

வீரம் நேருக்குநேர் போரிடும்

பெண்புலிகள் இன்று தலை

சாய்ந்தபின் அவமானம் என்றும்

திருந்தாத உன் வன்மம்!!....



இழந்தது எம் சொந்தம்

உயிரின் மேலான மானம்

சாரயகடைகளில் சல்லாப நடனமாடிய

உனக்கு தெரியுமா உயிரின்

மேலானது மானம் என்று!!....



உயிர்தந்து உடல்வெந்து உருவாக்கிய

எங்கள் கனவுதேசம் உயிரற்று

உடைந்து போனது உயிரின்

அருமை உனக்கு தெரியுமா

இத்தாலி எருமையே உனக்கு!!....



காட்டி கொடுத்து காவு

வாங்கிய கருணாநிதியே எம்

காவல் தெய்வங்கள் கலங்கிய

பொழுதுகள் தெரியுமா உனக்கு

உயிரின் மேலான மானமிழந்து!!....



வேடிக்கை பார்த்த வேற்று

மனிதர்களே எங்கள் வேதனை

பாருங்கள் வேண்டி விழுகிறது

எங்கள் வேடந்தாங்கல் பறவைகள்

உயிரின் மேலான மானம்காக்க!!....



மாவீரனாய் வீழ்வதேமேல் என்று

மரணத்தையே மண்டியிட செய்த

எம் மாவீரர்களே மறுபடியும்

எழுந்து வாருங்கள் நம்தேச

பெண்டீர் மானம் காக்க!!....



எம் வால்வெட்டிதுறையின் வரலாறே

எம் வன்னிதேசத்தின் வள்ளலே

உம்பிள்ளைகள் இன்று பிணமாகிறோம்

இனம்காக்க இயன்று இயலாது

எங்கள் மானம் காக்க!!....



நீயேஎன்றும் வரலாறு நீயின்றி

ஏது எங்கள் வரலாறு

இனம்காக்க புலியானோம் இன்று

மானம் காக்க பினமாணோம்

நாளை உனக்காகவே உருவாவோம்!!....



எம் கலங்காத கரிகாலனே

என்றும் தயங்காத கார்த்திகேயனே

எண்ணத்தில் எண்ணற்ற எல்லாளனே

என்றும் எங்களின் ராஜராஜனே

உம் வரவை நோக்கி!!!

*............*தம்பி*......

கலைந்த கனவும் கலையாத மனமும்

கலைந்த கனவும் கலையாத மனமும்


அறிவு கூர்மையும், உழைக்கும் உறுதியும் இருந்து விட்டால் கூட காணும் கனவு நனவாக முடியும் என்கிற கட்டாயமில்லை. விதியின் தீர்மானமும் ஒத்துழைத்தால் மட்டுமே ஒரு கனவு நனவாக முடியும் என்ற கசப்பான உண்மையை ஒரு ஏழை இளைஞன் தன் வாழ்வில் உணர்ந்தான்.

மைசூரைச் சேர்ந்த அந்த இளைஞன் ஒரு ஆசிரியரின் மகன். பள்ளிக்கூடத்தில் அவன் மிக புத்திசாலியான மாணவன் என்று பெயரெடுத்தான். அவனுடைய நீண்ட நாள் கனவு ஐஐடியில் (IIT- Indian Institute of Technology) பொறியியல் வல்லுனராகப் பட்டம் பெற வேண்டும் என்பது தான். அதற்கு நுழைவுத் தேர்வில் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும். நுழைவுத் தேர்வு மிகக் கடினமானது. அதற்கான விலை உயர்ந்த புத்தகங்கள் வாங்குமளவு வசதி இல்லை. அதற்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் பண வசதியும் இல்லை. ஆனாலும் அந்த இளைஞனும் அவனுடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து அந்த நுழைவுத் தேர்வை எழுத எண்ணினர்.

முந்தைய வருடக் கேள்வித்தாள்களுக்கான பதிலை எல்லாம் எல்லோரும் கலந்து விவாதித்து எழுதிப் பார்த்துக் கொண்டு என்னவெல்லாம் கேட்கக் கூடும் என்று ஆலோசித்து அனைவரும் கடினமாக உழைத்தனர். அந்தக் கடினமான நுழைவுத் தேர்வில் அந்த இளைஞன் அகில இந்திய அளவில் பதினேழாம் இடத்தில் வந்தான். புத்தகங்கள் வாங்காமல், பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல் அந்த இடத்தைப் பிடிப்பது சாதாரண விஷயமில்லை. அவன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை.

ஆனால் ஐஐடியில் பட்டப்படிப்பு முடிக்க ஆகும் செலவை அறிந்த போது அவனுடைய தந்தை அதிர்ச்சி அடைந்தார். ஐந்து மகள்களும், நான்கு மகன்களும் உடைய அந்தத் தந்தைக்கு ஒரு மகனின் கல்வியை மட்டும் கவனித்தால் போதாதல்லவா? ஆசிரியரான அவருக்கு அந்த அறிவாளியான மகனின் கனவுக்கு உதவ முடியவில்லையே என்ற வருத்தம் எந்த அளவு இருந்திருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மகனை அழைத்து அவன் கனவுப் படிப்பு தற்போதைய குடும்ப சூழ்நிலையில் சாத்தியமல்ல என்று சொன்னார்.

இறுதியில் அந்த இளைஞன் தன் கனவைக் கலைக்க வேண்டியதாயிற்று. அவனை விடக் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற அவனுடைய சில நண்பர்கள் ஐஐடியில் சேர அவர்களை வழியனுப்பி விட்டு வந்த அந்த இளைஞன் மனம் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஆனாலும் அவன் இடிந்து போய் உட்கார்ந்து விடவில்லை. விதி கொடுமையானது என்று புலம்பிக் கொண்டு செயலற்று இருந்து விடவில்லை. தன்னுடைய வாழ்விற்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், எது முடிகிறதோ அதை சிறப்பாகச் செய்து வாழ்வைத் தொடர வேண்டும் என்று எண்ணிய அந்த இளைஞன் மைசூரிலேயே உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் வல்லுனர் பட்டப் படிப்பு பெற்றார். சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே 1967ல் அந்தப்பட்டப் படிப்பையும், 1969ல் கான்பூரில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றான் அந்த இளைஞன். எழுபதுகளில் கணினி(கம்ப்யூட்டர்) என்ற அபூர்வ இயந்திரம் இந்தியாவிலும் அடியெடுத்து வைத்தது. அந்தக் காலக் கட்டத்தில் பெரிய பெரிய நிறுவனங்களிலும், சில அரசாங்கத் துறைகளிலும் மட்டுமே கணினிகள் பயன்படுத்தப்பட்டன. அந்த இளைஞன் "பத்னி கம்ப்யூட்டர்ஸ்" என்ற நிறுவனத்தில் 1977ல் பொது மேலாளராகச் சேர்ந்தான். அப்போது கணினிகளின் நுணுக்கத்தை அறிந்து வர அந்த இளைஞனை அந்த நிறுவனம் அமெரிக்காவுக்கு அனுப்பியது.

பட்டப்படிப்பு காலங்களில் கூட வேலைகள் செய்து கொண்டு பணத்தோடு அறிவையும் சேர்த்துக் கொள்ளும் பழக்கத்தைப் பெற்றிருந்த அந்த இளைஞனுக்கு அந்தப் பயணம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அமெரிக்காவில் கணினிகள் பற்றி முழுவதுமாக அறிந்து வந்த அந்த இளைஞன் எதிர்காலத்தில் கணினிகளின் தாக்கம் இந்தியாவிலும் கண்டிப்பாக அதிகமாகவே இருக்கும் என்பதைக் கணித்தான். கணினிகளின் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றைத் தானே ஆரம்பிக்க எண்ணினான். சேமிப்பு ரூபாய் பத்தாயிரம் மட்டுமே கையில் இருந்தது.

அப்போது அவனுக்கு திருமணமும் ஆகியிருந்தது. மனைவியும் படித்து நல்ல உத்தியோகத்தில் இருந்தவள். அவளிடம் அவன் ஆலோசனை கேட்ட போது நல்ல சம்பளம் உள்ள வேலையை விட்டு விட்டு சேமிப்பை எல்லாம் போட்டு ஒரு புதிய முயற்சியில் ஈடுபடுவது புத்திசாலித்தனமல்ல என்று சொன்னாள். நடைமுறைக்கு ஏற்ற நல்ல அறிவுரையாக அது இருந்த போதும் எதிர்காலத்தில் கணினிகள் ஆதிக்கம் கண்டிப்பாக அதிகம் இருக்கும் என்று கணக்குப் போட்ட அந்த இளைஞன் துணிவுடன் தன் மனைவியின் துணையுடனும், தன் நண்பர்கள் சிலர் துணையுடனும் ஒரு புதிய நிறுவனம் ஆரம்பித்தான். புனேயில் 7-7-1981ல் ஒரு சிறிய வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட அந்த நிறுவனம் இன்று உலக நாடுகளில் எல்லாம் கிளைகள் கொண்ட பிரம்மாண்டமான நிறுவனமாக கோலோச்சி நிற்கின்றது. அந்த நிறுவனம் இன்போசிஸ். அந்த இளைஞன் நாராயணமூர்த்தி.

ஐஐடியில் பட்டப்படிப்பு என்ற ஒரு கனவு கலைந்த போது அவர் தன்னை அதிர்ஷ்டமில்லாதவனாக முத்திரை குத்திக் கொள்ளவில்லை. என்ன செய்தாலும் நமக்கு வாய்ப்பதென்னவோ இவ்வளவு தான் என்று முயற்சிகளை அவர் குறைத்துக் கொள்ளவில்லை. ஒரு கதவை மூடும் இறைவன் அதை விடச் சிறந்த இன்னொரு கதவைத் திறந்து விடக்கூடும். சில கடினமான சூழ்நிலைகள் நம்மைப் பதப்படுத்தவே ஏற்படவும் கூடும். அதற்கெல்லாம் தயாராக இருந்து செயல்படுகிற மனிதனே காலப்போக்கில் வெற்றியடைகிறான் என்பதற்கு நாராயணமூர்த்தி ஒரு நல்ல உதாரணம்.

இறைவன் ஆலமரத்தை பெரியதாக வளர்ந்த மரமாகவே கொண்டு வந்து நட்டு விடுவதில்லை. ஒரு விதையாக உருவாகும் அது ஓர் பெரிய ஆலமரமாக வேண்டுமென்றால் கிடைக்கின்ற காற்று, நீர், பூமியின் சத்துக்கள் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். காலத்தோடு பொறுமையாகச் செயல்படவும் காத்திருக்கவும் அறிந்திருக்க வேண்டும். அது ஒரு நாள் மரமாகலாம். சில காலம் கழித்து காடே ஆகலாம். ஆனால் அதன் ஆரம்பம் மிகச் சிறிய விதை தான். அது அந்த நிலையில் தாழ்வு மனப்பான்மை கொண்டு விட்டால், சலிப்படைந்து விட்டால் மரமாகும் வாய்ப்பையும், காடாகும் வாய்ப்பையும் என்றுமே இழக்க நேரிடும்.

அறிவு கூர்மையும், உழைக்கும் உறுதியும் இருந்து விட்டால் கூட காணும் கனவு நனவாக முடியும் என்கிற கட்டாயமில்லை. விதியின் ஒத்துழைப்பும் தேவை தான். ஆனால் விதி ஒத்துழைக்காத போதும் மன உறுதியை இழந்து விடாமல் முன்னேறும் மனிதனை மெச்சி அதே விதி அவனுக்கு உதவத் தீர்மானிக்கிறது. எனவே இளைஞர்களே, உங்களுடைய ஓரிரு கனவுகள் கலையக்கூடும். எல்லாக் கனவுகளும் கைகூடும் மனிதர்கள் இது வரை பூமியில் வாழ்ந்ததில்லை. நாம் இன்று போற்றி பிரமிக்கும் எத்தனையோ பெரிய மனிதர்கள் கூட நினைத்தபடியெல்லாம் இருக்க முடிந்ததில்லை. அதை நினைவில் வையுங்கள். கனவு கலைந்தாலும், மனம் கலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள்ளும் ஒரு நாராயணமூர்த்தி இருக்கலாம். நீங்களும் காடுகளை உருவாக்கும் விதையாக இருக்கலாம். அந்த சாத்தியக்கூறை கௌரவியுங்கள். நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருக்குமானால் நீங்களும் நிறைய சாதிப்பீர்கள். சிகரங்களை எட்டுவீர்கள்!

- என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்

அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை

அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!





முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

ஓரு மகன் சொன்னான். “நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்”

வியாபாரி கேட்டான். “எப்படி?”

“புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்:”

இன்னொரு மகன் சொன்னான். “நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்”

வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான். “எப்படி?”

“வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போபவர்கள் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது. அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன். ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது ந்ன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”

வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான்.

மூன்றாம் மகன் சொன்னான். “நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தேன்”

வியாபாரி ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான். “எப்படி?”

“அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத் தூண்ட உதவும் என்றேன். அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலா என்று மடாலயத் தலைவர் கேட்டார். நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும், அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன். அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத்தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்”

அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று சொல்ல வேண்டியதில்லை.

மொட்டை பிக்குகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம் காணக்கூடிய மனோபாவம். விதி சில சமயங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட இதே போலத் தான் இருக்கும். அதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை என்று முதலில் தோன்றும். ஆனால் அதை ஒப்புக் கொண்டு முடங்கி நிற்போமானால் நாம் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டோம் என்பது பொருள்.

அந்த வியாபாரியின் மகன்கள் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தது புத்திசாலித்தனமான செயல். நாமும் நாம் இருக்கும் அந்த மோசமான சூழ்நிலைக்குத் தீர்வே இல்லை என்று ஆரம்பத்தில் தோன்றினாலும் ஏதாவது செய்து நல்ல தீர்வைக் காண வேண்டும் என்று தீர்மானிப்பதுவே அறிவு.

முயற்சிகளிலும் பல வகை உண்டு என்பதற்கு வியாபாரியின் மூன்று மகன்கள்
முயற்சிகளே உதாரணம். ஒரு மகன் புத்த பிக்குகளிற்குத் தலை வார சீப்பு பயன்படா விட்டால் வேறெதற்காவது பயன்படுமா என்று யோசித்ததன் பலனாக இரண்டு சீப்புகள் அவனால் விற்க முடிந்தது. புத்த பிக்குகளுக்கு சீப்பு பயன்படாமல் போனாலும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சீப்பு பயன்படுமா என்று இன்னொரு மகன் யோசித்ததால் அந்த புத்த மடாலயத்தின் முன்புறம் சில சீப்புகள் வைத்து பக்தர்கள் தலைமுடியை முறையாக வாரிக் கொண்டு உள்ளே நுழைய உதவியாக பத்து சீப்புகள் விற்க முடிந்தது.

ஆனால் இந்த இரண்டு மகன்களுடைய முயற்சியாலும் தொடர்ந்து அந்த புத்த மடாலயத்திற்கு சீப்பு விற்க வழியில்லை. அவர்களுடைய விற்பனை ஒரு முறையோடு முடிந்து போய் விட்டது.

மூன்றாம் மகன் கூட இரண்டாம் மகன் போலவே புத்த பிக்குகளுக்குப் பயனில்லா விட்டாலும் அவர்களுடன் சம்பந்தப்படும் மற்றவர்களுக்குப் பயன்படுமல்லவா என்கிற சிந்தனையைத் தான் செய்தான். அந்த வெறும் சீப்பை புத்தரின் உபதேசங்களைச் செதுக்கி அதை அவர்கள் விரும்பும் வண்ணம் உயர்த்தி அதை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு புத்தரின் ஆசியாக மாற்றி விற்பனை செய்தான். அவனுடைய வித்தியாசமான சிந்தனை அதற்காக அவன் எடுத்துக் கொண்ட உழைப்பு எல்லாம் மற்றவர்களை மிஞ்சும் வண்ணம் வெற்றி பெற்றது. மேலும் மற்ற இருவரைப் போல் இவனுடைய விற்பனை ஒரு முறையோடு முடிகிற விற்பனை அல்ல. புத்த மடாலயத்திற்கு நன்கொடைகள் தருகிறவர்கள் அதிகரிக்க அதிகரிக்க இவன் விற்பனையும் அதிகரிக்கும்.

ஒரு சூழ்நிலையை ஒரே நேர்கோணத்தில் பார்ப்பது இரண்டு சீப்பு விற்ற மகனைப் போல அற்ப விளைவுகளையே ஏற்படுத்தும். பார்வையை சற்று விரிவுபடுத்தி வேறு கோணங்களிலும் சிந்தித்து செயல்படுவது பத்து சீப்பு விற்றவன் முயற்சி போல நல்ல விளைவுகளை அதிகரிக்கும். மேலும் பல கோணங்களிலும் சிந்தித்து, தன் திறமையையும் உழைப்பையும் சேர்த்து முயற்சி செய்பவன் அடையும் நன்மைகள் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தவன் முயற்சியைப் போல பலமடங்கு அதிகரிக்கும். ஆரம்பத்தில் வழியே இல்லை என்று தோன்றியது போய் புதிய பிரதேசங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வாய்ப்பாக அமையும்.

எனவே எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் மனம் துவண்டு விடாதீர்கள். முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள். புதிய புதிய கோணங்களில் சிந்தியுங்கள். சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்று யோசியுங்கள். பொறுமையுடனும், நம்பிக்கையுடனும், துடிப்புடனும் முயன்றால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போகும் அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.

என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்