பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Tuesday, 14 June 2011

*ஒ...செவ்வானமே சற்று சிதறி போ

*ஒ...செவ்வானமே சற்று சிதறி போ


இன்று எங்கள் தோழன் *சே* பிறந்ததினம்..
இவன் பிறந்ததால் புரட்சி பிறந்ததா அல்லது
புரட்சி பிறந்ததால் இவன் பிறந்தானா சற்று
சொல்லி விட்டு போ!!.......

ஒ...மழைமேகமே சற்று மழைதூவி போ
இன்று எங்கள் மாவீரன் *சே* பிறந்ததினம்..
இவன் குருதிப்பட்டு தேசம் சிவந்ததா அல்லது
தேசம் சிவந்தால் இவன் குருதிப்பட்டதா சற்று
சொல்லி விட்டு போ!!.......

ஒ...தென்றல்காற்றே சற்று ஒய்வு எடுத்துக்கொள்
இன்று எங்கள் புரட்சிபுயல் *சே* பிறந்ததினம்..
இவன் புயலானதால் புரட்சி ஏற்பட்டதா அல்லது
புரட்சி ஏற்பட்டதால் இவன் புயலானானா சற்று
சொல்லி விட்டு போ!!......

ஒ...மலைக்குன்றுகளே சற்று சிரம் தாழ்த்துங்கள்
இன்று எங்கள் சிந்தனையாளன் *சே* பிறந்ததினம்..
இவன் தோன்றியதில் உங்களுக்கு பெருமையா அல்லது
உங்களிடம் அடக்கமானதில் உங்களுக்கு பெருமையா சற்று
சொல்லி விட்டு போ!!.......

ஒ...ஒடுக்குமுறையாளர்களே ஒருநிமிடம் யோசித்து சொல்லுங்கள்
இன்று எங்கள் ஒடுக்கபட்டவர்களின்தோழன் *சே* பிறந்ததினம்..
இவன் பிறந்ததால் ஒடுக்குமுறை தகர்ந்ததா அல்லது
இறந்ததால் ஒடுக்குமுறை தகர்ந்ததா யோசித்து சற்று
சொல்லி விட்டு போ!!.......

ஒ...என் உயிர் தோழனே எங்கேநீ
இன்று என்னுள்புரட்சி ஏற்படுத்திய நீ பிறந்ததினம்..
என்னிடம் மட்டும் சொல்லி விட்டு போ....என்று
நீ மீண்டும் பிறப்பாய்!!!

*......... ...*தம்பி* ...............

No comments:

Post a Comment